காலம் - 28

498 42 119
                                    

தன் அறைக்கு அன்னநடை போட்டு சென்று கொண்டிருந்த மகேந்திரன் தீவிரமாய் அவன் அன்னை புலம்பியவைகளை அசை போட்டு கொண்டிருந்தான்...

மகேந்திரன் : ஹ்ம்.. அந்த பெரிய வீட்ல பேயிருக்குன்னு அம்மா சொல்றாங்க... ஆனா அந்த பொண்ணுங்க அது கண்டுக்குட்ட மாரியே தெரியல... பட் ஏதோ ஒன்னு உண்மையவே இருக்கு... அன்னைக்கு கார்ல கூட என் கழுத்த நெறுக்குச்சே என யோசிக்கும் போதே அவன் மூச்சு குழாய் அடைக்க... மூச்சு விட்டு அதை சரி செய்தவன்... ம்ம் அங்க பேய் இருக்குன்னு நீரூபிச்சு ஏன் அவளுங்கள இங்க நா கூட்டீட்டு வர கூடாது... அப்டி வந்துட்டா ரொம்ப ஈசியா திட்டம் தீட்டலாமே... என தனக்கு தானே பேசி கொள்ள...

தீரா : ஆமா சாரு பெரிய இவரு... இவரு கூப்ட்ட உடனே அவளுங்க பெட்டி படுக்கைய தூக்கிகிட்டு இங்க வர்ரதுக்கு...

இதையே மைண் வாய்சில் ஓட்டி கொண்ட தமிழ் " இவன் டம்மி பீசு தான் " என அங்கிருந்து மறைந்தான்...

மகேந்திரன் : விட கூடாது.. எப்டியும் நாளைக்கு இங்க இரெண்டு பேர் வேலைக்கு வருவாங்கல்ல... ஹ்ம் யாரு வர்ரதுன்னு பாத்துட்டு அவங்க கிட்ட தூண்டில போடுறேன்.. அடியேய் (ஹஃப்னா) உன்ன சும்மா விட மாட்டேன்... இந்த மகேந்திரன் யாருன்னு காற்றேன்...

தீரா : இவன் அவன் டெட்பாடிய ஊரு உலகத்துக்கு காட்டாம இருக்க மாட்டான் போலருக்கே... என்னைக்கு தமிழ் இவனுக்கு பாட கட்ட போறானோ....

என்றும் போல் வீட்டின் கூரையில் ஒரு காலை தொங்க விட்டு மறுகாலை முட்டு கொடுத்தவாறு அமர்ந்திருந்தான் தமிழ்... அவன் அருகில் தோன்றிய ஆருஷா அமைதியாய் அங்கு அமர்ந்திருக்க அவளின் வருகையை முன்பே உணர்ந்திருந்தவன் அவள் அனைத்தையும் மறந்திருப்பாள் என்ற நம்பிக்கையில் அமைதியாய் இருக்க... ஒரே கேள்வியில் அவனுக்கு மாரடைப்பே வர வைத்தாள் அவள்...

ஆரு : ஆருஷான்னா யாரு... என இவள் அவனை பார்த்து கேட்க... அவன் சட்டென திரும்பி பார்த்து அதிர்ச்சியாய் கண்களை விரித்தான்...

காலத்தின் மாய மரணம்... (முடிவுற்றது)Where stories live. Discover now