காலம் - 55

476 42 108
                                    

வாழ்வே முடிய இருக்கும் அன்றைய நாளின் விடியல் மிகவும் வேகமாய் விடிய... தமிழ் அருகிலில்லாததை உணர்ந்து சீக்கிரமாகவே விழித்து கொண்ட தாஹினி காலையிலே குளித்து விட்டு வெள்ளை சுடிதார் அனிந்து கீழே இறங்கினாள்...

வயிறு வலிப்பதை போல் உணர்ந்தவளுக்கு பசி எடுக்க... பாலை தேடும் பூனையை போல் சமையலறையை நோட்டம் விட்டு கொண்டிருந்தவளை இரசித்து பார்த்து கொண்டிருந்தான் தமிழ்...

வெள்ளை நிற சுடிதாரிலே அசல் பூனை குட்டியை போல் இருந்தவளை காண காண தெகிட்டவில்லை அவனுக்கு ... அவனை கவனிக்காத தாஹினியும் பால் கிடைத்த திருப்தியில் அதை காய்ச்சி டீ போட்டே குடித்து விட்டாள்... தமிழ் வந்த சுவடின்றி அங்கிருந்து மாடிக்கு சென்றான்...

மணி எட்டை தொட இருவது நிமிடம் இருந்த நேரம் தஸ்னியும் அஃப்ரியும் அன்று அவர்கள் போட போகும் உடையை பற்றி ஏதோ பேசியவாறு கீழே வந்தனர்...

தஸ்னி : ஹே தாஹி இப்போ எப்டி டி இருக்க...

தாஹினி : எனக்கென்ன டி நல்லா இருக்கனே...

அஃப்ரி : நேத்து சாப்டு சாப்டுன்னு சொன்னா கேட்டியா... மயங்கி விழுந்ததும் அண்ணா செம்மையா பயந்துட்டான்...

தாஹினி : ம்ம்ம் அது எனக்கே தெரியல டி.. திடீர்னு மயக்கம் வந்துடுச்சு...

தஸ்னி : சரி நைட்டாவது தூங்குனியா...

தாஹினி : ஹான் நல்லாவே தூங்குனேன்... நீங்க என்ன ரெடியா... என கேட்டு கொண்டிருக்கும் போதே...

ஹஃப்னா : நாங்க ஆல்செட் மச்சி... ட்ரெஸ் மாத்தீட்டா போதும் ஆட ஆரம்ச்சிடுவோம்... என புத்துணர்ச்சியுடன் கூறி கொண்டு துள்ளி குதித்து கீழே வந்தாள்...

அஃப்ரி : எரும மாடி படில பாத்து வா... அங்கேந்து தடுக்கி விழுந்தா எலும்பு கூட தேராது...

ஹஃப்னா : வாய வைக்காத நாயே... என வாலை சுருட்டி விட்டு கீழே வந்தாள்...

ஹனா : இந்தாங்க டி ரெக்கார்ஸ்ஸு... என மாடியிலிருந்து பாட்டு டேப்ரிக்காடுகளை தூக்கி கொண்டு கீழே வந்தவள் தாஹினியை விசாரிக்க தொடங்கினாள்...

காலத்தின் மாய மரணம்... (முடிவுற்றது)Where stories live. Discover now