காலம் -8

507 46 54
                                    

இளங்காலை செங்கதிர்களுடன் புலர.... தன்னை ஓரமாய் நின்று சைட்டடித்து கொண்டிருந்த மதி கணவனை மனையாள் அவள் பாடு பட்டு அனுப்பி விட்டு அவனால் ஏற்பட்ட நாணத்தை கொண்டு உலகை எழ வைத்தாள் சூரியன்.. சோம்பல் முரித்து விரிந்த மலர்கள் புன்னகையுடன் சூரியனவளின் வெட்க கதிரை தாங்க இயலாமல்.... " போதும் போதும் ரொமன்ஸு " என்பதை போல் சினுங்கி கொண்டிருந்தது....

மெல்ல தன் விழிகளை கசக்கியவாறே எழுந்த ஹனா சபீலாஹ்வை தவிர்த்து மற்றவள்கள் உறங்குவதை கண்டு அவளை தேடி வீட்டை விட்டு வெளியே சென்றாள்....

கண்ணிற்கெட்டிய தூரம் வரை தோழியை காணாது சட்டென ஒட்டி கொண்ட பதட்டத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடி சுற்றி முற்றி பார்த்தாள்.... தூரத்தில் ஒரு மரத்தினருகில் ஏதோ செய்துவாறு நின்றிருந்தவளை கண்டதும் அவளருகில் ஓடி சென்றாள்.... தலையை விரித்து திரும்பி நின்று மரத்தை ஏதோ செய்து கொண்டிருந்தவளின்  தோளில் மெதுவாய் கை வைத்தாள் ஹனா..

சட்டென திரும்பிய சபீலாஹ் அவள் கழுத்தில் கை வைத்து நெரிக்க தொடங்கினாள்... அதிர்ந்த ஹனா கத்த தொடங்க....

சபீலாஹ் : ஹாஹா பயந்துட்டியா டெடி.... என கெக்கபெக்கவென சிரிக்க....

ஹனா : எரும... பைத்தியம்...  லூசு... என மண்டையிலே சராமரியாய் அடித்தாள்...

சபீலாஹ் : விட்டு தொலடி என அவளிடமிருந்து தப்பி ஓடிய சபீலாஹ் வீட்டிற்குள் ஓடி அனைவரின் தூக்கத்தையும் கலைத்தாள்....

தஸ்னி : எந்த எரும டி தூக்கத்த கலச்சது...

அஃப்ரின் : அதோ ஓடுது பாரு அதுதா...

ஹஃப்னா : உங்கள சும்மா விட மாட்டோம் டி... என கூட்டமாய் துரத்த தொடங்கினாாள்கள்... அவர்கள் அடித்து சிரித்து விளையாடும் சத்தம் வீட்டில் நிறைய.... அடுத்த நொடி கூரையில் அலங்காரத்திற்காய் தொங்க விட பட்டிருந்த கன்னாடி பொருள் தொப்பென கீழே விழுந்து நொருங்கியது....

வீல் என கத்திய அனைவரும் மெல்ல கண்களை திறந்து பார்க்க.... சுச்கு நூறாய் உடைந்து நொருங்கியிருந்தது அந்த கன்னாடி பொருள்...

காலத்தின் மாய மரணம்... (முடிவுற்றது)Where stories live. Discover now