காலம் - 32

604 46 108
                                    

காலை விடிய இன்னும் சில மணி நேரங்களே இருக்க... லிங்கம் ராமு வைத்தி மூவரும் படபடப்புடன் சாமியாரின் குகைக்கு பயணித்து கொண்டிந்தனர்... அங்கு அவரோ ஏதோ ஒரு யோசனையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தார்...

லிங்கம் : சாமி சாமி...

சாமியார் : வா லிங்கா... வா...

ராமு : உபசரிக்கிர நேரமா சாமி இது... மூணு நாள் ஆச்சு... அமர் ஏன் இன்னும் ஒன்னுமே பன்னாம இருக்கான்...

சாமியார் : அதான் எனக்கும் தெரியல ராமா...

லிங்கம் : என்ன பதிலிது சாமி... விட்டா தமிழ் எங்க எல்லாரையும் அழிச்சிருவான்... அவனும் காரணமே இல்லாம அமைதியா இருக்கான்.... அந்த பொண்ணுங்க ஏழு பேருக்கும் பூர்வ ஜென்மம் நினைவு வந்தா என்ன ஆகுறது...

சாமியார் : உளறாத லிங்கா... அப்டி எதுவும் ஆகாது... அதோட ஏழு இல்ல... தமிழுக்கு ஆறு தங்கச்சிங்க மட்டும் தான்... அந்த இன்னோறு பொண்ணு வேற யாரோ...

வைத்தி : இருந்துட்டு போது சாமி... அது முக்கியம் இல்ல... இப்போ அமர் என்ன செய்ய போறான்...

" செய்ய வேண்டிய நேரத்துல சரியா செய்வேன்... நீங்க அவன் கிட்ட இருந்து மட்டும் ஜாக்கிரதையா இருங்க " என பின்னிருந்து ஒரு அலட்சியமும் கம்பீரமும் கலந்த கரரான குரல் கேட்க... இவர்களின் பின் அலையலையான கேசத்தை அழுந்த கோதி கொண்டு நின்றான் அமர்...

சாமியார் : என்ன செய்ய போற அமர்...

அமர் : ஹ்ம் ... அவன் தங்கச்சிங்கள என்னால நெருங்க முடியல... ஆனா கூட இருக்குர இன்னோறுத்திய என்னால என் கையாலையே கொல்ல முடியும்... அவள தான் கொல்ல போனேன்... ஆனா அங்க கடைசி நேரத்துல அவன் வந்துட்டான்... பிரச்சனை இல்ல... இன்னைக்கு அவங்க விரதம் இருக்காங்க... அதனால எல்லாத்தையுமே நா பாத்துக்குறேன்...

லிங்கம் : என்ன செஞ்சிருக்க தம்பி... என்ன செய்ய போற...

அமர் : அந்த பொண்ணு இருக்காளே ராதினா... இப்போ அவ அவளே அறியாம தமிழ விரும்பிக்கிட்டு இருக்கா... என எங்கோ பார்த்தவாறு அலட்சியமாய் கூற...

காலத்தின் மாய மரணம்... (முடிவுற்றது)Where stories live. Discover now