காலம் - 49

436 36 94
                                    

தொப்பலாய் நனைந்து தலை முழுக்க இரத்தத்துடன் சுயநினைவற்று கிடந்தவனின் தலையை தன் மடியில் கிடத்தி கொண்ட தாஹினி கத்தி அழுதாள்...

நம் நாயகிகள் நடந்த நிகழ்வினில் அதிர்ந்து போய் நிற்க... பெருமூச்சறித்தவாறு நின்ற பிரபா கீழே முட்டியை முட்டு கொடுத்து அமர்ந்தவன் தமிழின் கன்னத்தை தட்டினான்...

பிரபா : டேய்... டேய்... கண்ண திற டா... மச்சான்... டேய் என அவன் கன்னத்தை தட்ட தட்ட நிலையின்றி அவன் முகம் மண்ணோக்கி சரியவும் இன்னும் பதறிய தாஹினி அவன் தலையை தூக்க... சில நொடிகளிலே அவள் கரத்தின் சாயத்தை கண்டவள் அதிர்ந்து இளன் என கத்தினாள்...

பிரபா : ஹே என்ன மா ஆச்சு... ஏன் கத்தர...

தாஹினி : அண்ணா ... த..தலைல எங்கையோ அடி பற்றுக்குண்ணா... இ..இ..இரத்தம் ... என திக்கி தினறியவள் உடனே துப்பட்டாவை உறுவினாள்...

அவளின் துப்பட்டாவாலே அவனது தலையை சுற்றி இறுக்கி கட்டிட்டவள் பிரபாவை பார்க்க... நேரம் தாமதிக்காமல் அவனை தோளில் தூக்கி போட்டு கொண்ட பிரபா உடனே காரிற்கு சென்று தோழிகளையும் கூட்டி கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்...

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தமிழுக்கு சிகிச்சை நடந்து கொண்டிருந்தது... பிரபா தன்னையே கட்டுப்படுத்தி கொண்டு மருத்துவ அறையின் வாயிலில் குட்டி போட்ட பூனை போல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான்...

யாருக்கு யார் ஆறுதல் சொல்ல வேண்டுமெனவே தெரியாமல் தோழிகள் ஏழ்வரும் கண்ணீருடன் பயத்தில் அமைதியாய் அமர்ந்திருந்தனர்... தாஹினியின் இதயம் மிகவும் மெதுவாய் துடித்து கொண்டிருந்தது... இதழை கடித்து அழுகையை கட்டுப்படுத்தி கொண்டிருந்தாள்..

மனம் தமிழினது நாமத்தை விடாது ஜெபிக்க... சரியாக கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார் மருத்துவர்... பிரபாவும் நாயகிளும் அவரை சூழ்ந்து கொள்ள... தாஹினி அவர் சொல்வதை தன்னை தானே வருத்தி கொண்டு கவனித்தாள்...

மருத்துவர் : நத்திங் டு வர்ரி... சீக்கிரம் நீங்க கொண்டு வந்ததால ரொம்ப ப்லட் லாஸாகுரதுக்கு முன்னாடியே காப்பாத்தீட்டோம்... ஹி ஈஸ் ஆல்ரைட்... தலைல பலமான அடி இல்ல... இப்போ நல்லா இருக்காரு... கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு அழச்சிட்டு போய்டலாம்... நல்லா ரெஸ்ட் எடுக்க வைங்க... என கூறவும் தான் அனைவரும் மூச்சு விட்டனர்..

காலத்தின் மாய மரணம்... (முடிவுற்றது)Where stories live. Discover now