அன்னதான பலன்

122 12 8
                                    

ராஜா (மகன்): அம்மா, நாம எடுப்பதோ பிச்சை... அதிலும் நீங்கள் மற்றவர்களுக்கு கொஞ்சம் கொடுத்து விட்டு மிச்சம் இருப்பதை நாம் சாப்பிடுகிறோமே ஏன்?


அம்மா: ராஜா...இதை அன்னதான பலன் என்பார்கள்.

ராஜா: அன்னதான பலன் என்றால் என்ன அம்மா?

அம்மா: அதை பற்றி தெரியாது எனக்கு. என் தாய் தந்தை கூறியதை நான் கடைப்பிடிக்கிறேன். நீ வேணும்னா அதன் காரணத்தை மலையில் உள்ள மாமுனிகளிடம் தெரிந்து கொண்டு வா...

ராஜா: சரி அம்மா...

மறுநாள் அம்மா தன் மகனுக்கு இரு நாட்களுக்கு தேவையான துணி மற்றும் மிச்சம் இருந்த உணவையும் கட்டி கொடுத்தார்.

அம்மா: ஜாக்கிரதையாக போயிட்டு வா டா கண்ணா...

ராஜா: சரி அம்மா...

கொஞ்ச தூரம் சென்றதும், ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து உணவை சாப்பிட்டு விட்டு எழுந்தான்.

தம்பி, தம்பி,.... என்ற சப்தம் கேட்டது..

திரும்பி பார்த்தான்.. யாரும் இல்லை. மறுபடியும் தம்பி என்று கேட்டது. குனிந்து பார்த்தான். ஒரு நல்ல பாம்பு நின்றுகொண்டு இருந்தது. ராஜாவுக்கு பயமாக இருந்தது.

பாம்பு: பயப்படாதே தம்பி, நீ எங்கு செல்கிறாய்?

ராஜா: அன்னதான பலன் என்றால் என்ன என்று தெரிந்து வரப்போகிறேன்.

பாம்பு: சரி தம்பி எனக்கு ஒரு உதவி செய்வாயா?

ராஜா: என்ன உதவி.?

பாம்பு: எனக்கு இரவில் கண் தெரியவில்லை. அதன் காரணத்தை அறிந்து வருவாயா?

ராஜா: கண்டிப்பாக..

கொஞ்ச தூரம் நடந்து சென்றான்..

மறுபடியும் தம்பி என்று கேட்டது..

இப்போது ஒரு பெரிய மாமரம் பேசியது.

மாமரம்: தம்பி, தம்பி எங்கே போகிறாய்? எனக்கு ஒரு உதவி செய்வாயா?

ராஜா: அன்னதான பலன் என்றால் என்ன என்று அறிந்து கொள்ள போகிறேன்.. சொல்லுங்கள் செய்கிறேன்.

தாத்தா பாட்டி கதைகள்Where stories live. Discover now