மறுநாள் காலை வரும் போது நிறுவனத்திற்குல் நிறைய மாற்றங்கள். புதிய தளபாடங்கள், சுவர்களிற்கு புதிய வர்ணப் பூச்சு என அட்டகாசமாக இருந்தது.
வழக்கம் போல் தன்னிடத்தில் வந்து அமர்ந்த பவி பாரதியை பார்த்து பாரதி... நம்ம ஆபிஸ் செம்மையா இருக்குல்ல. ஒரே நாள்ல எப்படி மாத்திட்டாறு நம்ம பாஸ். இவர் போல ஒருத்தருக்கு கீழ்ல வேலை செய்ய நாம்ம குடுத்து வெச்சிருக்கனும் என்றாள் பவி.
ஏன்டி எரும நீ திருந்த மாட்டியா...
எப்பபாறு அவனோட புராணம் சை. அவனப் பற்றி உனக்கு என்ன தெரியும். நல்லவன் போல நடிக்கிறானா? யாரு கண்டது. இனி மேல் அவன் புராணம் பாடினாய் கொண்டுபுடுவேன். என சத்தமிட பவி மெதுவாக சென்று அவளது இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
ஏனோ பாரதிக்கு பவி ஆதியை பற்றி பேசவும் கோபம் வந்தது.
ஆதி பாரதியை எப்படி பழி வாங்கலாம் என யோசித்து செயல்படுத்தத் துவங்கினான்.
ஆதியின் பீ.ஏ வாக
இருந்த பாரதியை அவனது அறையிலேயே மேசை ஏற்பாடு செய்து பாரதியை நண்பிகளிடம் இருந்து பிரித்து மாற்றினான்.ஒரு பீ. ஏ போதாது என்று மஹீமாவையும் பீ.ஏ வாக மாற்றி பாரதியின் அறையிலேயே இருக்கச் செய்தான்.
விடயமறிந்த பாரதி தலையில் கை வைத்து சோகமாக அமர்ந்திருந்தாள்.
பாரதி என்னடி கப்பல் கவுந்த மாதிரி இப்படி சோகமாக இருக்க.
இப்போ இரண்டு பீ.ஏ இருக்கிறதால உனக்கு வேலை குறைவாக தான் இருக்கும். இதுல கவலைப்பட என்ன இருக்கு.என பவி கேட்க.
பாரதி மனதால் இது எனக்கு ஹேல்ப் இல்ல. எனக்கு சாவு மணி டி. சாவு மணி. அவன் பழி வாங்கவே என் இடத்த மாற்றினான். இது தெரியாம இதுக உசுற வாங்குது. நேரம் காலம் தெரியாம திவ்யாவோட போன் வேற வேலை செய்யுது இல்ல. என தனியே புலம்பினாள்.
இங்க பாரு பாரதி உனக்கும் அந்த மஹிமாவுக்கும் ஒத்து வராதுன்னு தெரியும்.பாஸயும் அவ்வளவா பிடிக்காதுனு தெரியும்.
ஆனால் பாஸ் ரொம்ப நல்லவர் டி. பழக பழக நீயே விளங்கிப்ப.
பாரதியோ மனதால் *அடிங்கு எனக்கு ஆதிய பற்றி சொல்லுறியா எனக்கு தெரியாத ஆதியா?*
நம்ம பாஸ் நம்மல என்ன செய்து பிரிச்சு வச்சாலும் அது ஆபீஸ்ல மட்டும் தான். மத்த படி மஹீமா வம்பு பண்ணினா நாம மூனு பேர். அவ தனி ஆள். வச்சி வாங்கிடலாம் என்று கூறவும் பாரதியின் முகத்தில் சிரிப்பு ஒட்டிக் கொண்டது.
என்ன தான் பவி,ரித்விக் நம்பிக்கையூட்டினாலும் பாரதி இடம் மாறிச் சென்றதும் கவலை அப்பிக் கொண்டது.
ஆதியின் அறையில் இருப்பதால் பவிக்கும் பாரதிக்கும் அடிக்கடி கதைக்க முடியாபல் போனது.
பாரதிக்கு முதல் நாள் முடியும் போது ஒரு யுகம் கழிந்தது போல உணர்ந்தாள். அடச்சீ இது எல்லாம் ஒரு வேலையா? அந்த பரதேசி இப்படி இடத்த மாத்திட்டானே. சைக்கோ.
இவன் தொல்லைய கூட தாங்கிக் கொள்ளலாம்.ஐயோ.... ஐயோ அந்த மஹீமா தொல்லைய தான் சகிக்க முடியல கடவுளே. என்றாள் முதலாம் நாள் முடிவில் பவியிடம்.
ஆதிக்கு ஒரு வாரமாக சந்தோஷம் தாங்க முடியவில்லை. தன்னுடைய ஐடியா வெற்றி பெற்றதில்.
மஹீமா பாரதியை ஆட்டிப் படைத்தாள். பாரதியை வெளியே செல்ல விடாமல், நண்பர்களுடன் பேச, சேர்ந்துண்ண விடாமல் தண்ணால் ஆன அனைத்தையும் செய்தாள்.
பாரதிக்கு அழுகை வந்த போதும் காட்டிக் கொள்ளாமல் வேலை செய்தாள்.
தொடரும்.....
YOU ARE READING
என் அவள்
Romanceகல்லூரியில் காதல் வந்தும் காட்டிக் கொள்ளாமல் பிரிந்த இருவர். பின் அவள் செய்த செயலால் அவள் வேலை செய்த கம்பனியையே விலைக்கு வாங்கி. அவளறியாமலே நடக்கும் காதல் திருமணம்....