மறுநாள் ஆதி வெளியே வர சமையற்கார அம்மா. தம்பி உங்க கூட கொஞ்சம் கதைக்கனும்.
சொல்லுங்கம்மா.
இல்லப்பா.... இங்க. இங்க வேணாம். இங்க கதைச்சா பிரச்சினையாகிடும்.
அப்போ எப்படிமா கதைக்கிறது?
இப்போ நான் வீட்டுக்கு காய்கறி வாங்க போறேன். நீங்க அங்க வாங்கன்னு சொல்லி விட்டு நகர்ந்தார்.
என்னவாக இருக்கும்.என்னோட தனியாக கதைக்கிற அளவிற்கு.என்று யோசித்த படியோ.
பாரதி எனக்கு அவசரமாக ஆபீஸ் போகனும். மீடிங் இருக்கு என்று கூறிஅவசரமாக தயாராகி புறப்பட்டான்.
கடையில் ஆதி வரும் வரை காத்திருந்த சமையல்கார அம்மா(கண்ணம்மா) ஆதியை கண்டதும் விரைந்து வந்து வீட்டில் நடக்கும் நிகழ்வுகளைக் கூறினார். தம்பி "பாரதியோட வீட்டுல இருந்துட்டே பாரதி புண்படுத்துறாங்கப்பா." பாவம் கொஞ்சம் நாளாகவே பாரதி பொண்ணோட முகம் சரியில்லப்பா. உண்மையாக சிரிச்சி பேசுறதுக்கும்; போலியாக சிரிச்சி பேசுறதுக்கும் நிறைய வித்தியாசம் தம்பி.
நான் யாரும் இல்லாத அநாதையாக இருந்தப்போ வேலைக்குச் சேர்ந்தேன் தம்பி. என்ன வேலைக்காரியாக நடத்தாம குடும்ப ஒருத்தராகவே நடத்தினவங்கப்பா அந்த வீட்டு பிள்ளைங்க.
பாரதி குழந்தையா இருந்தப்போ தான் றான் அந்த வீட்டுக்கு வந்தேன். அதனால எனக்கு பாரதி பொண்ண பற்றி நல்லா தெரியும். பாரதி கிட்ட இருந்த சிரிப்பு, குறும்புத்தனம் எதுவுமே இப்போ இல்லப்பா... ஒரே என்னவோ யோசிச்சிகிட்டே இருக்கா.தயவு செஞ்சி அவள கூட்டிடுப்போயிடுப்பா என கையெடுத்துக் கும்பிட்டார் கண்ணம்மா.
ஐயோ அம்மா.... என்ன பண்ணுறீங்க. நீங்க என்ன விட எவ்வளோ பெரியவங்க. என்ன போய் கும்பிட்டுக்கிட்டு.
எனக்கும் பாரதியோட நடவடிக்கைல சந்தேகமாக தான் இருந்துச்சி. இப்போ கன்போர்ம் ஆகிடுச்சி. நான் பாத்துக்கிறேன் மா. நீங்க கவலைய விடுங்க.
எனக்கு இப்போ ஆபீஸ்கு டைம் ஆகிடுச்சி.என்று கூறி புறப்பட்டான்.
மாலை நேரம் ஆபீஸில் இருந்து போன் செய்து. பாரதி நீ ரெடியாக இரு. நாம வெளியில போகலாம் என்று கூற.
இல்லங்க. கவி... என்று இழுக்க.
கவியோட அத்த இருக்காங்க தானே. நாம வெளியே போய் ரொம்ப நாளாச்சு.பேசாம ரெடியாகி இரு. நான் இன்று நல்ல மூட்ல இருக்கன். அத மாத்திடாத.
சரிங்க நான் ரெடியாகி இருக்கன்.
ஆதி ஆபீஸில் இருந்து வந்தும் பாரதி அறையை மூடியபடி தயாராகிக் கொண்டிருந்தாள்.
பாரதீ.... சீக்கிரமா வா... என்று மூன்றாவது முறையாகவும் அழைக்க. அவளும் இதோ ஒரு நிமிஷத்துல வந்துடுறேன் என்று குரல் கொடுத்தாள்.
ஒருமணி நேரமா ஒரு நிமிஷத்துல வந்துடுறேன் என்று சொல்றாளே தவிற வெளியே வந்த பாடில்லை. என்று தனக்குத் தானே கூறி பல்லைக் கடித்துக் கொண்டான்.
அவனது பொறுமை பறக்க. கதவை தட்டப் போன சமயம். அழகு தேவதையாய். மயில் நிற சேலையில் இருந்தவளைப் பார்த்து சிலையாகி நின்றான்.
பாரதியின் வெண்ணிறத்திற்கு மயில் நீல வர்ணம் மேலும் எடுப்பாகக் காட்ட.
ஆடம்பரமில்லாமல் சாதாரணமாக அவள் அணிந்திருந்த அணிகலன்கள் அவளது அழகை இன்னும் கூட்டியது. அவள் முடியை லூசாக விட்டிருக்க.காதோரமாய் விழுந்திருத்த முடிக்கற்றைகள் அவளை மேலும் மெழுகேற்றியது.
அவளையே பார்த்த படியே நின்ற ஆதியை. நன்றாக கில்லி வைத்தாள்.
ஐயோ அம்மா...
எதுக்குடி கில்லின.
மனுசன இப்படி விழுங்கப் போற மாதிரி பார்த்தா. வேற என்ன பண்ணுவாங்க.
என்ன மாதிரியே திருப்பிப் பாக்குறது. என்று கூற.
ஹா... பாக்கலாம்... பாக்கலாம்.. என்று காதை திருகிபடி சொன்னாள்.
இப்பவாச்சும் கிளம்பலாமா? என்று பாரதி கேட்க.
இப்போவே போகனுமா பேபி.
ஆமா என்று கூற.
சரி வா... என்று கூறி அவளது கையை தன் கைக்குள் போட்டு கோர்த்த படி கிளம்பினார்கள்.
வரப் போகும் ஆபத்து தெரியாமல்
தொடரும்....
YOU ARE READING
என் அவள்
Romanceகல்லூரியில் காதல் வந்தும் காட்டிக் கொள்ளாமல் பிரிந்த இருவர். பின் அவள் செய்த செயலால் அவள் வேலை செய்த கம்பனியையே விலைக்கு வாங்கி. அவளறியாமலே நடக்கும் காதல் திருமணம்....