காலமும் உருண்டோட கவியும் ஒரு பெண் குழந்தைக்குத் தாயானாள். ஆனால் விடிந்ததில் இருந்து பாரதியின் மனம் படபடப்பாக இருந்தது.
ஆதியும் விடிந்ததிலிருந்து பாரதியை கவனித்துக் கொண்டிருந்தான். கதிரையில் அமர்ந்தபடி யோசனை, கட்டிலில் அமர்ந்தபடி யோசனை அங்கும் இங்கும் இருந்து யோசித்துக் கொண்டிருக்க.
ஆதி பாரதியிடம் சென்று உடம்பு சரியில்லையா? என விசாரித்து நெற்றியைத் தொட்டுப் பார்க்க காய்ச்சலும் இல்லை. என்ன என்று கேட்டும் ஒன்றுமில்லை என சாதித்து விட்டாள்.நேரம் செல்ல.
ஆதியிடம் சென்று என்னங்க நாம கட்டாயம் தேவாவுடை வளைகாப்புக்கு போய்த்தான் ஆகணுமா? என்று கேட்க.
ஓ மேடம் இவ்வளவு நேரம் இதத்தான் யோசிச்சுட்டு இருந்தீங்களா? அஜய் உன்னை கட்டாயப் அழைச்சிகிட்டு வர சொன்னான். அது மட்டும் இல்லாம நேத்து உன்னோட வந்து தங்க சொன்னான். நான் தான் ஆபீஸ்ல வேலை அதிகம். நாளைக்கு பாரதியோட வந்திடுறேன் என்றேன்.
நீ இப்ப போக வர மாட்டியா? என்று கேட்க இல்லங்க கவியோடு வளைகாப்பு என்று தொடங்கி அவளை முறைத்துவிட்டு. பேசாம போ போய் இந்த சாரிய ட்ரஸ் பண்ணிட்டு வா என சாரி ஒன்றை பரிசளித்தான் ஆதி.அதற்குமேல் எதுவும் பேச முடியாமல் பாரதி சாரியுடன் அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
இங்குகோ டேய் அஜய் எந்திரிடா.... இன்னைக்கு எனக்கு வளைகாப்பு டா. அதுகூட புரியாம மாமியார் வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை மாதிரி தூங்குற.
என்ன தேவா.... என் செல்ல குட்டி இல்ல இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேனே.... தேவாவோ கண்கலங்க. எனக்குத்தான் யாரும் இல்ல என்ன தேடி யாரும் வரப் போவதுமில்லை. ஆனா நீங்க அப்படி இல்ல. உங்க குடும்பத்தில் இருந்து எல்லாரும் வந்துடுவாங்க. அஜய் எழுந்தமர்ந்து நீ யாரும் இல்லாதவளா? அழுத்தமாக கேட்க. தேவா பயத்துடன் இல்லை என தலையாட்டினாள்.
அவளது பயந்து முகத்தைக் கண்டு இந்த பேச்சை மாற்றும் பொருட்டு. நேத்து நைட் முழுக்க மாமியும், மருமகளும் சேர்ந்து அதைச் செய்.
இதைச் செய் என்று உயிரை வாங்கின இப்ப திரும்பவும் வேலை செய்யணுமா? என்று சலித்துக் கொள்ள.
VOCÊ ESTÁ LENDO
என் அவள்
Romanceகல்லூரியில் காதல் வந்தும் காட்டிக் கொள்ளாமல் பிரிந்த இருவர். பின் அவள் செய்த செயலால் அவள் வேலை செய்த கம்பனியையே விலைக்கு வாங்கி. அவளறியாமலே நடக்கும் காதல் திருமணம்....