அவள் 25

639 17 10
                                    

பாரதி வீட்டினர்  பாரதியை ஆதி வீட்டில் விட்டுச் செல்ல பாரதியின் கண்கள் குளமாகின.

இரவுப் பொழுது வரை ரோஹினியின் அறையில் இருந்த பாரதி. இரவானதும்  அவளை அலங்கரிக்கத் தொடங்க பயம் தொற்றிக் கொண்டது. ஆதியின் அறைக்கு பால் சொம்புடன் தயங்கிய படி உள்ளே செல்ல.

பாரதிக்காக காத்துக் கொண்டிருந்த ஆதியோ சிரித்த முகமாக  அவளை அவனது அருகில் அமருமாறு சைகை செய்ய. அவனது அருகே தயங்கித் தயங்கி அமர்ந்தவள். ஆதியை பார்த்து  "என்ன... பழிவாங்குறதுக்காகவா கல்யாணம் கட்டினீங்க."என்று அழாத குறையாக கேட்க.

இல்ல  பாரதி. நான் உன் கூட வாழ்றதுக்காக  தான் கல்யாணம் கட்டினன். நீ உன் தப்ப உணர்ந்து மன்னிப்பு கேட்டியோ அப்போவே உன்ன  மன்னிச்சிட்டன். உண்மைய சொல்லனும்னா எனக்கு உன் மேல  கோபம்  இல்ல. சின்ன வருத்தம் தான். என் மேலயும் கோபம் தான். காலேஜ்ல உன்ன முதல் முதலா பார்த்தப்பவே நான் முடிவு பண்ணிட்டன். கல்யாணம் ஒன்று நடந்தா அது உன் கூட மட்டும் தான்னு. என்ன செய்ய. காலேஜ் லாஸ்ட் நாள் ப்ரபோஸ் பண்ணலாம்னு இருந்தன். பட் அதுகுள்ள என்ன என்னமோ நடந்துட்டு.

அதுக்கு அப்புறம் நீ என் ஆபீஸ்க்கு வந்து அடிச்சிட்டு போன பிறகு. நான் டிடெக்டிவ் ஏஜன்ட் மூலமா உன் விபரத்த திரட்டினன்.

அப்போ தான் தெரிஞ்சிது நீ பரத் மாமா பொண்ணு என்று. சின்ன வயசுல கூட ரொம்ப கோபப்படுவியே. என் கூட  வேற யாராச்சும் விளையாடினா,வேற பொண்ணுங்க கூட கதைச்சா... அந்த மாதிரியே இன்னும் இருக்கனு  உன்ன மன்னிச்சிட்டன்.

அம்மா ,அப்பா வேற பரய் மாமாவ தேடிட்டு  இருந்ததால என் ப்ரண்ட் ராம் அ நான் அம்மா அப்பாக்கு அறிமுகப்படுத்தி, அவங்க பரத் மாமாவ பற்றி தேட சொன்ன பிறகு ராம் தேடின மாதிரி நடிச்சி உன் அப்பாவோட டீடெல்ஸ் உடன் உன் டீடெல்ஸ், போடோவும் கிடைக்கிற மாதரி செட்அப் செய்தேன்.

அம்மா உன் போட்டோவ பார்த்ததும் இவ தான் என் மருமகனு சொன்னானு ராம் சொன்னப்போ எவ்வளவு சந்தோஷமா இருந்திச்சி தெரியுமா?

என் அவள்Where stories live. Discover now