அவள் 38

314 9 2
                                    

பதினைந்து நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ்  செய்து அழைத்துச் செல்ல ஆதி மற்றும் வம்சி மட்டுமே வந்தனர்.
பாரதிஏன் நீங்க இரண்டு பேரும் மட்டும் வந்துருக்கீங்க என்று கேட்பாள் என அறிந்த வம்சி.

அண்ணி உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு அதனால வாய மூடிட்டு வரனும் என்று உத்தரவிட பாரதி வாயை மூடிக் கொண்டாள்.

பாரதி என்ன சர்ப்ரைஸ் ஆக இருக்கும் என்று எண்ணிய படி செல்ல. கொஞ்சம் தூரம் சென்று வம்சி கறுப்புநிறப் பட்டியால் பாரதியின் கண்களைக் கட்டினான்.

வம்சி என்ன பன்னுற எனக்கு  எதுவுமே விளங்க மாட்டேங்குது என்று சிறுபிள்ளை போல் கூற ஆதி வாய் விட்டே சிரிக்க.

என்ன அண்ணி கண்ண கட்டுறது ஒன்னுமே விளங்காம இருக்கத்தானே, எல்லாம் விளங்க யாராவது கண்ண கட்டுவாங்கலா? என்று கூற பாரதி வாயை மூடி அமைதியானாள்.

ஆதி வீட்டின் முன் காரை நிறுத்தி விட்டு பாரதியை வீட்டின் கதவு முன் நிறுத்தி கண்ணில் இருந்த துணியை அகற்றிவிட்டு ஆதியும் வம்சியும் மறைந்து நின்றார்கள்.

பாரதி கண்ணில் இருந்த கட்டு அப்புறப்படுத்தவும் மெதுவாக கண்ணை திறந்த பாரதிக்கு எதுவும் விளங்கவில்லை. கண்கள் இரண்டும் இருட்டாக இருக்க திரும்ப கண்ணைக் கசக்கி விட்டு திறக்க ஆதியின் வீட்டுக் கதவின் முன் நின்றிருந்தாள்.

ஆனால் கதவு மூடப்பட்டிருக்க ஆதி, வம்சி இருவரையும் காணவில்லை. உள்ளுர பயம் வந்தாலும் மெதுவாக கதவை திறக்க கதவு திறந்து கொண்டது.

வீடு முழுவதும் கும்மிருட்டாக இருக்க மெது மெதுவாக லைட்டின் ஸ்விட்ஷை நெருங்கும் போது கதவு மூடிக்கொண்டது.

பாரதியின் இதயம் டக் என்று நின்றது. இதயத்துடிப்பு  அதிகரிக்க யாராவது இருக்கீங்கலா....
ப்ளீஸ் பேசுங்க... பயமா இருக்கு  என்று அழுகுரலில் பேசியும் பதில் ஏதும் இல்லை.

பாரதி  நடுங்கிய கையுடன் லைட்டை ஒன் செய்ய வீட்டில் இருந்த அனைவரும் பிறந்தநாள் வாழ்த்தைக் கூற பாரதி பயம்,சந்தோஷம் என்ற இரண்டும் ஒருசேர வர அழுதே விட்டாள்.

என் அவள்Where stories live. Discover now