அடுத்த நாள் கல்லூரியில் புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விழாவும் ,கலை விழாவுமென கலை கட்டியது.
பாரதி பேச்சிற்கு கலந்து கொள்வதாக இருந்தாள்.
பாரதியின் செயலால் கோபத்தில் இருந்த ஆதி. பாஸ்கரிடம் பொரிந்து தள்ளினான். அவ என்னடா நினைச்சிட்டு இருக்கா? அவங்க வந்து ஹங் பண்ணினதும் ரண்டு நல்லா போடலாம்னு கைய எடுத்தா. நல்லவ மாதிரி வேஷம் போட்டு காரியத்த நாரடிச்சிட்டா டா. என்னமோ அவங்க ஹங் பண்ணினதும் ஜாலியா இன்ஜாய் பண்ணிண மாதரி பண்ணிடா. சீ இத நான் சும்மா விட போறது இல்ல என மர்மமாக சிரித்தான்.
கலைவிழாவும் ஆரம்பமானது. பாரதி முதன் முதலாக கல்லூரிக்கு சாரி அணிவதாக. அதுவும் நிகழ்ச்சிக்காக கல்லூரிக்கு வந்து ஆயத்தமானாள்.
திவி எனக்கு பயமா இருக்குடி.
ஏன் எதுக்கு பயப்படுற. நீ தான் பேச்ச நல்லா பாடமாக்கி வச்சிருக்கியே அது மட்டுமில்லாம. நீ பாடமாக்காமலேயே நல்லா பேசுவியே. என்னமோ இன்று தான் முதல் தடவ பேச போறது மாதிரி சீன் போடுற என்று கூற.
இல்ல திவி முதல் தடவ சாரி கட்டுறன். ஸ்டேஜ்ல ஏதாவது ஆகிட்டு என்டா என்று திக்கி திணரி கூற.
திவி விடுக் என்று
நீயா சாரி கட்டுற. நான் தானே கட்டி விடுறன். அது மட்டும் இல்லாம எத்துன பின் அடிச்சிருக்கன் தெரியுமா? சாரிக்கு எதுவும் நடக்காது. முத தடவ சாரி கட்டுறப்ப வார பயம் தான். சும்மா டென்ஷன் ஆகாம இரி என்று கூற.
இல்ல திவி எதுவோ தவிர நடக்க போற மாதிரி பீலிங் என்று கூற.
பாரதி பங்ஷன் ஸ்டாட் ஆகி. ஒன்னாவது நிகழ்ச்சி முடிஞ்சிட்டு. இரண்டாவது நிகழ்ச்சி நடந்துட்டு இருக்கு.உன் நிகழ்ச்சி எத்தனயாவது என்று கேட்டாள் பிரியா.
என்னோடது எட்டாவது நிகழ்ச்சி என்று கூறும் போதே. கவி விழுந்தடிச்சி கிட்டு ஓடி வந்தாள்.
ஏய் கவி உனக்கு மண்டைல மூலை கொஞ்ம் சரி இருக்கா. சாகப் போற மாதிரி ஓடி வார என்று சத்தமிட்டாள் திவி.
ESTÁS LEYENDO
என் அவள்
Romanceகல்லூரியில் காதல் வந்தும் காட்டிக் கொள்ளாமல் பிரிந்த இருவர். பின் அவள் செய்த செயலால் அவள் வேலை செய்த கம்பனியையே விலைக்கு வாங்கி. அவளறியாமலே நடக்கும் காதல் திருமணம்....