என் அவள்

2.5K 53 46
                                    


"மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்" என்ற புரோகிதர் இந்த மந்திரத்தின் அர்த்தத்தையோ, அதன் முக்கியத்துவத்தையோ சொல்லவில்லை. ஆனால் அவளின் கழுத்தில் மங்கல நானை பூட்டிய நம் கதாநாயகனுக்கு அதன் அர்த்தம் தெரிந்தே இருந்தது.
என்னுடைய வாழ்க்கையில் இன்றியமையாதவளாகி இருப்பவளே இந்த மங்கல நானை உன் கழுத்தை சுற்றி அணிவித்து நம் உறவை உறுதி செய்கிறேன்.மிகச் சிறந்த குணநலன்களை உடையயவளே. நீ நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.
அவனுக்கு தான் அவனுடைய தந்தை சிறுவயதிலேயே அதன் அர்த்தத்தை சொல்லிக் கொடுத்திருக்கிறாரே. திருமணம் என்றதால் என்னவே மனதில் ஆழமாக பதிந்து இருந்தது.
அவன் கட்டிய மாங்கல்யத்தை தலை குனிந்து வாங்கியவள் "அவ்ளோ தான் என்னோட வாழ்க்கை முடிஞ்சிடுச்சி....😔😔 இனி இவனுக்கு காலம் முழுக்க அடிமையா இருக்கனும்.
இவன் சும்மாவே என் கூட சண்டைக்கு வருவான். என்னுடைய பேச்சை கேட்கவே மாட்டான். இனி குணிந்தால் குற்றம்... நிமிர்ந்தால் குற்றம்..இனி என்னுடைய சுதந்திரம் பறிபோய்விடும்...இல்ல இல்ல இவனுக்கு அடிமையா என்னுடைய சுதந்திரத்தை இழந்து நிற்பதற்கு நான் ஒரு சாதாரண பெண்அல்ல.. நான் பாரதி.
பாரதி கண்ட புதுமை பெண்ணாக ஆக இருக்க வேண்டும்.
பாரதியின் கணவன் கண்ணில் வெற்றிக் களிப்பை நன்றாக காண முடிந்தது.
பாரதி மனதில் ... நீ என்கிட்ட செத்தடா மகனே..என்று அழகு தேவதையாக மணக்கோலத்தில் அமர்ந்திருந்த பாரதி நினைக்க என்ன காரணம்.
கல்லூரியில் ஒரே வகுப்பில் பயின்ற பாம்புக்கும்,கீரிக்கும் இன்று திருமணம்.இவர்கள் வாழ்வில் என்ன நடந்தது..இனி நடக்கப் போவது என்ன. கதையின் போக்கில் தெரிந்து கொள்வோம்.காதலும் மோதலும் நிறைந்த அழகான காதல் கதை

என் அவள்Donde viven las historias. Descúbrelo ahora