மறுநாள் காலை முதல் பாரதியின் இல்லம் பரபரப்பானது.
கண்களை கசக்கிய படி பத்து மணிக்கு எழுந்து வந்த பாரதியை பார்த்து சிரித்த வண்ணமே எழுந்துட்டியா பாரதி இந்தா காபி என கையில் கொடுக்க.
பாரதி கண்களை கசக்கி தனது தாயை பார்த்தாள்.
இதுவே வேறு நாள் என்றாள். என்னடி பெண் புள்ள தானே நீ. நேரத்த பாரு.எல்லாம் உன் அப்பன சொல்லனும். புள்ளயா வளர்க்குறாரு. அவர் கண்டிக்கிறதும் இல்ல. அடுத்தவர கண்டிக்க விடுறதும் இல்லனு புழம்பலை ஆரம்பித்து விடுவார்.
பாரதிக்கே சிரிப்பாக இருந்தது. தாயின் மாற்றத்தை பார்த்து. எவ்வளோ சந்தோஷமாக இருக்குறாங்க. கடவுளே இது நிலைச்சிருக்கனும்.
நேரம் செல்ல மாலையில்
பாரதி ப்ளூ கலர் லெஹங்காவில் ஜொலித்தாள். பாரதியைக் கண்ட மகா சொக்கித்தான் போனார். நீல நிற லெஹங்கா அவளுக்கு கச்சிதமாய் பொருந்தியிருந்தது. முன்னால் சில முடிகளை சுருள் போன்று சுறுட்டி விட்டிருந்தனர். அழகுக்கலை நிபுணர்கள்.அழவான மேகப் என ஜொலித்தவளை மகா திருஷ்டி கழித்தார்.
அங்கு மாப்பிள்ளை கிருஷ் குடும்ப ஜோசியரை மிரட்டிக் கொண்டிருந்தான்.
ஜோசியரே !
என்னப்பா சொல்லு. அருகுல எப்ப நல்ல நாள் வருது?
எதுக்குப்பா நல்ல நாள் கேட்குற?ஐயா புது பிஸினஸ் ஏதாவது ஆரம்பிக்கிறாரா?
"ஆ.....கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு. போதுமா?"
சின்னய்யா...! அம்மா நேத்து தான் உங்க கல்யாணத்துக்கு ஜோசியம் பாத்தாங்க.
சரியா பத்து பொருத்தமும் பொருந்தி இருக்கு.
"நா பாத்த பொண்ணு. எனக்கு பொருந்தாம இப்பாளா?" ( என்னடா? நீ புதுசா கத சொல்லுற)
என்னய்யா நீங்க சொல்லுரீங்க!
டேய் இவன் சரி வர மாட்டான் டா...
"இவன பேசாம போட்டுடு".
என்ன சின்னய்யா சொல்லுரீங்க.
YOU ARE READING
என் அவள்
Romanceகல்லூரியில் காதல் வந்தும் காட்டிக் கொள்ளாமல் பிரிந்த இருவர். பின் அவள் செய்த செயலால் அவள் வேலை செய்த கம்பனியையே விலைக்கு வாங்கி. அவளறியாமலே நடக்கும் காதல் திருமணம்....