ஆபிஸை விட்டு வேகமாக வெளியே வந்தவன் காரை எடுத்துக் கொண்டு வேகமாக பறந்தான்.
வேகமாக வந்த கார் பிரமாண்டமான வீட்டின் முன் நின்றது.
காரில் இருந்து இறங்கியவனின் அழுத்தமான காலடி ஓசையிலேயே அவனது கோபம் தெளிவாகத் தெரிந்தது.
வீட்டினுள்ளே நுழைந்த ஆதி
கரண்..... கரண்.... என்று சத்தமிட்டான்.அவனது சத்தம் வீட்டுச் சுவரில் பட்டுத் தெறிப்படைந்தது.
ஆதியின் குரல் கேட்டு கரண் விழுந்தடித்துக் கொண்டு அவன் முன் வந்து நின்றான்.
சொல்லுங்க ஐயா.... என்று ஆதியை பார்த்து கேட்க.
ஆதி கரணை பார்த்து. இன்று காலைல சிக்னல் கிட்ட ஆக்ஸிடன்ட் ஏதாச்சும் நடந்துச்சா....
இல்லய்யா... அப்படி ஒன்னும் நடக்கலயே. என்று திக்கி திணறி கதை சொன்னான் கரண்.
ஓ... அப்படியா..... அப்போ... நீ... காலைல சிக்னல் கிட்ட ஒரு பெரியவர இடிக்கல்ல... இடிச்சது நம்ம காரும் இல்ல. அப்படி தானே.
ஆமா சார். என்று சொல்லி முடிக்கும் மறுகணம் ஆதியின் ஐந்து விரல்களும் கரணின் கன்னத்தில் இருந்தது.
கரண் உனக்கே தெரியும் நான் தப்பு செய்திட்டு உண்மையை சொன்னா கூட மன்னிச்சிடுவன்.ஆனால் பொய் சொல்லி மறைக்க நினைச்சால் மன்னிக்கவே மாட்டான் என்று கத்தினான் ஆதி.
ஐயா தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்கய்யா.. இந்த வேலை போய்டுச்சினா நானும் என் குடும்பமும் இல்லா கதி ஆயிடுவோம் ஐயா... நான் தனி ஆள்டா கூட பறவல்ல. காலேஜ் போகின்ற தங்கையும், படுத்த படுக்கையா அம்மாவும் என்ன நம்பி இருக்காங்க ஐயா.... என ஆதியின் காலின் விழப் போக தடுத்தவன் உண்மையச் சொல்லு என்றான்.
இல்லன்னா உன் டிரஸ் எல்லாம் எடுத்துட்டு ஐந்து நிமிஷத்துல வீட்ட காலி பண்ணு. என்று கூற. இல்லய்யா நா உண்மையை சொல்லிடறன் என்னும் போதே ஆதியின் அம்மா லதாவும் வந்து சேர்ந்தார்.
KAMU SEDANG MEMBACA
என் அவள்
Romansaகல்லூரியில் காதல் வந்தும் காட்டிக் கொள்ளாமல் பிரிந்த இருவர். பின் அவள் செய்த செயலால் அவள் வேலை செய்த கம்பனியையே விலைக்கு வாங்கி. அவளறியாமலே நடக்கும் காதல் திருமணம்....