அவள் 04

970 24 12
                                    


கருப்பு நிற காற்சட்டையுடன் யாரோ நிற்க பாரதி தலையை மெல்ல தூக்கி பார்த்தாள். வேகமாக இறங்கி  ஓடி வந்ததில் மூச்சிரைக்க இடுப்பில் கை இரண்டையும் ஊன்றிய படி ஆதி நின்றிருந்தான்.

பாரதி அவனைக் கண்ட மாத்திரத்தில் அவனைக்கட்டி பிடித்து அழுது தீர்த்தாள்.ஆதி  அவளைத் தள்ளி விட்டு நீ சின்னப் பிள்ளையா?  உன்ன தேடி அலைறது தான் என் வேலையா? என்று கடு கடு வென
பேசினான்.

ரயிலில் உள்ள நண்பர்கள் ரயிலை நிறுத்தி. விட்டு இறங்க  கண்ட ஆதி.  வா என அவளை அழைத்த படி முன்னால் சென்றான்.

திவ்யா ஓடி வந்து  நா இருக்கன் தைரியமா இரு என்று கட்டித் தழுவிக் கொண்டாள்.ரயில் நிக்குது  வா போகலாம். என அழைத்து வந்தாள்.

ஆதி மனதில்
(எவ்வளோ தைரியமான பொண்ணு மாதிரி காட்டிகிட்டா. இவ்வளோ பயமா? இல்ல நடிப்பா...என மனதில் நினைத்தான்)

ரயிலிற்கு அருகில் திவியும்,பாரதியும் வரவும் பாரதியின் மற்றைய நண்பிகள் இறங்கி வரவும் சரியாக இருந்தது.

நண்பிகள் அவளை அழைத்துச் சென்று அமரச் செய்து என்ன நடந்தது .என விசாரிக்க தொடங்க முதல்ல. அவளுக்கு கொஞ்சம் தண்ணிய கொடுங்க, ரிலக்ஸ் ஆ விடுங்க என்றாள் திவி.

பாரதி மனதில் நா தனியாகவே நின்னு இருப்பன். இந்த கிருக்கன யாரு வரச் சொன்னது. என மனதால் பொறிந்து தள்ளினாள். இது திவியோட வேலையாக இருக்குமோ. எதுக்கும் கேட்டு பாக்கனும். என்று எண்ணிய படி கண்ணயர்ந்தாள்.

திவி மனதில் இவள் எண்ண யோசிச்சிட்டு தூங்கினா? எதுவானாலும் நமக்கு நல்லது நடந்தா சரி கடவுளே என வேண்டிக் கொண்டாள்.



பாரதியின்  மற்றைய  தோழிகள் திவியிடம் நாம இவ்வளோ  பேர்  இருந்தே பாரதி இல்லாதது விளங்கல. ஒனக்கு மட்டும் எப்படி அவள் இல்லாதது. கரக்டா  எப்படி விளங்கியது  என்று கேட்க. அவள் என்னோட பெஸ்டி ஸோ அவள் இல்லாதது எனக்கு விளக்கிட்டு. ஆனால் அதுக்கு போய் அந்த ஆதி கிட்ட உதவி கேட்கவாகும்னு நினைக்கல்ல. பாரதிக்கு நா தான் அவன்ட உதவி கேட்டேன்னு தெரிஞ்சுது. எனக்கு சங்கு தான்.
அவன் மனிசனா? என திவி புகழ் பாட.

என் அவள்Dove le storie prendono vita. Scoprilo ora