மறுநாள் ஆபிஸ் வந்த பாரதி பவி சுகன்யா இருவரிடமும் நடந்ததை நடந்ததை மூச்சி விடாமல் சொல்லி முடித்தாள் இருவரும் ஆறுதல் சொல்லுவார்கள் என எதிர்பார்க்க. அவர்களோ தாண்டவம் ஆடினர்.
ஏன்டி எல்லா விஷயத்தையும் போன்ல பேசுவ தானே.ஏன் இத சொன்னா என்ன? நா வந்து உனக்கு பதில் நிற்பேன் என பயந்தியா? என பவி கேட்க பாரதி அழுதே விட்டாள்.
'ஏய் என்னடி ஏன் அழுவற' அழு மூஞ்சி பாரதி சொல்லிட்டு அழு.
நா க்ரிஷ் அ காணவே இல்ல.
என்னது.......... க்ரிஷ் அ காணவே இல்லயா.
ஏன் சுகன் இவ வெக்கத்துல மாப்பிள்ளைய பார்க்காம இருந்துட்டாவோ...
இல்ல திவி க்ரிஷ் வரவே இல்ல. வரவே இல்லயா.... என இருவரும் கோரசாக கேட்க.
அப்பாவியாக பாரதி தலையாட்டி. அவங்க மணமேடை ல தான் என்ன பார்ப்பாங்கலாம். இன்னும் சரியா பதினான்கு நாள்ல கல்யாணம். நான் இன்னும் இரண்டு இல்ல மூனு நாள் தான் ஆபீஸ் வருவேன். என அழுங்காமல் குழுங்காமல் இடியை இறக்கி. சோகமாக பாரதி இருந்த சமயம் அந்த வழியாக ஆதி வந்தான்.
ஆதி பாரதி கதைத்துக் கொண்டிருந்ததை பார்த்து. இது ஆபீஸ் இங்கு வேலை மட்டும் தான் பார்க்கனும். 'வேலை மட்டும் தான்' என மீண்டும் அழுத்தமாக கூறி பாரதி நீ என் கெபின்கு வா. என்ன படி உள்ளே செல்ல.
பாரதிக்கு ஐயோ என்றிருந்தது. ஆதியின் கெபினிற்கு சென்று ஆதி வாயை திறக்கும் முன்பே ஸாரி ஆதி என்றாள்.
ஆதி அவளை முறைத்துப் பார்க்க. ஸாரி சேர் தவறி பெயர் சொல்லிட்டன். நான் உங்க டிரைவர் வண்டிய ஓட்டினது தெரியாம உங்கள அடிச்சிட்டன். என்று சொல்ல ஆதிக்கு சட்டென்று கோபம் வந்தது. கோபத்தை முயன்று கட்டுப்படுத்தியவாறு. உனக்கு ஒரு ஸாரி கேட்க இவ்வளோ நாள் ஆயிடுச்சில்ல என பல்லை கடித்துக் கொண்டு கேட்டான்.
அது சரி நீ சரியான ஈகோ பிடித்த கழுத உன் வாயில இருந்து எங்க ஸாரி வரப் போகுது.என்று கூறி விட்டு பைலை பார்க்கத் தொடங்க.
KAMU SEDANG MEMBACA
என் அவள்
Romansaகல்லூரியில் காதல் வந்தும் காட்டிக் கொள்ளாமல் பிரிந்த இருவர். பின் அவள் செய்த செயலால் அவள் வேலை செய்த கம்பனியையே விலைக்கு வாங்கி. அவளறியாமலே நடக்கும் காதல் திருமணம்....