🔱யின்
♥️கதிர் வேலனின் வைரம் முல்லை ♥️Episode 23
காலையில் அனைவரும் குளித்து விட்டு, அவரவர் அறையில் இருந்து
வெளியே வர,தனம் மட்டும் லட்சுமி அம்மக்காக காபி ஆற்றி கொண்டு இருந்தார்.
கதிர் ,ஜீவா, முல்லை மீனா அனைவரும் ஒன்று கூட ,கதிர் ...அண்ணி ...அண்ணா எங்கே என்று கேட்டார்,அவருக்கு பதில்
சொல்லாமல் தனம் ஜீவாவை பார்த்து ..தனம்: ஜீவா.. மாமா உன்னை கடைக்கு வர சொன்னார்,இந்த பெரிய
மனுஷனை குடோன் ல இருக்கிற அரிசி மூட்டைகளை கணக்கு பண்ணி அதுல 50 மூட்டையை எங்கோ அனுப்ப சொன்னாரு ,,,, நான் அத வேற மறந்துட்டேன்.ஜீவா: என்னடா கதிர் என்ன பிரட்சணை ?
கதிர்: எங்க அனுப்பனும் சொன்னா தானே அனுப்புறது கேட்டு சொல்லு அண்ணா?
ஜீவா: டாய் என்ன வைத்து காமெடி பண்றீங்களா, நான் கடைக்கு போறேன் உங்க விளையாட்டுக்கு நான் வரல, அண்ணி நான் கிளம்புறேன், மீனா bye கண்ணா பை , எல்லாருக்கும் பை.. பை ..
மீனா:(மனசுக்குள்) எதோ ஒரு விஷயம் இருக்கு, இன்னைக்கு
கண்டுப்புடிக்கிறேன்.கதிர்: அண்ணி ஏன் எங்க மேல இவ்வளவு கோபம்.
தனம் எதுவுமே சொல்லாமல் உள்ளே போனாள்.
முல்லை : நான் பார்த்துக்கிறேன், நீங்க கிளம்புங்க மாத்திரை
எடுதுட்டிங்களகண்ணா : கதிர் அண்ணா என்னையும் பஸ் ஸ்டாப்பில இறக்கி விட்டுடு
என கதிறுடன் கிளம்பினான்....கதிர் குடோன்க்குக் போக அங்கே மூர்த்தி நின்று கொண்டு இருந்தார்.
கதிர்: அண்ணா என் மேல கோவமா என்னை மன்னித்துவிடு, அதுக்காக சாப்பிடாம உடம்பை கெடுத்துக்காதே ,
மூர்த்தி: கோவமா? அதாலம் இல்ல டா, நீங்க சொல்றது எல்லாம் சரி தான் நானும் தனத்துக்கிட்ட எவ்வளவோ சொன்னேன்,இந்த வயசுக்கு மேல குழந்தை பிறந்தா நல்லா இருக்காது என்கிறாள்.
YOU ARE READING
💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞
Humorநான் எதுவும் குறிப்பிட்டு சொல்வதற்கு இல்லை படிச்சு பாருங்க புடிச்சா கதையை தொடர்ந்து படிங்க.. இது நான் படித்ததில் பிடிச்சது.. அவுங்ககிட்ட கேட்டு post பண்றேன் 😁😁