KVVM

164 23 4
                                    

வியாழன் காலை அனைவரும் கடைக்கு கிளம்பும் முன்பு ஒன்றாய்

அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.

மூர்த்தி : இன்னைக்கு அந்த தம்பி கவின் சாப்பிட வருவார்...இல்ல..

N.V. எதாவ்து வாங்கி வரவா....?

கதிர் : நான் வேணும்னா..போய் வாங்கிக்கொண்டு வரட்டுமா...

மூர்த்தி : நீ இன்றும் வீட்ல இருந்து ரெஸ்ட் எடு நாளைக்கு கடைக்கு

வா

முல்லை : மாமா நாளைக்கு மதியம் 1.30 மணிக்கு கண்ணனுக்கு

பரீட்சை , நான் தான் போய் அவன் சொல்ல...சொல்ல..எழுத வேண்டும்.

மூர்த்தி : வேண்டாம் பா .....அவன் இந்த வருஷம் பரீட்சை

எழுதலைனா...ஒண்ணும் இல்ல...

கதிர் : என்ன அண்ணா இப்படி சொல்றீங்க. ...அவன் எழுதட்டும்....

தனம் : அந்த ராஜானால எதாவ்து தொல்லை வந்ததுன்ன....

ஜீவா : இனிமே அவன் நம்ம இருக்கிற பக்கமே வர மாட்டான் அண்ணி...

அனைவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது மூர்த்தியின் போன் மணி அடித்தது, அதில் வந்த நம்பரை பார்த்த உடன் படபடத்து போன மூர்த்தி...

மூர்த்தி : ஜீவா நீ இங்கே என்ன வேணும்ன்னு பார்த்து வாங்கி கொடுத்துட்டு ,கடைக்கு போய்டு ...எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் வரேன்.

தனம் : மாமா இருங்க கடை பை கொண்டு வரேன்.

தனம் வருவதற்குள் மூர்த்தி தனதிடம் கூட சொல்லி கொள்ளாமல் கிளம்பி விட்டார்,பையுடன் வெளியே வந்த தனம்....

தனம் : மாமா எங்கே..

ஜீவா : அண்ணன் கிளம்பிடடாங்க...

தனம் : கடை சாவி இங்கே இருக்கு ....அதுவும் இல்லாமல் என்கிட்ட

சொல்லாமல் போக மாட்டார்....என்னன்னு தெரியல, சரக்கு விஷயமாக ஊருக்கு போய்ட்டு வந்ததில் இருந்தே அவர் சரி இல்ல...,எதோ ஒன்னு நம்மகிட்ட இருந்து மறைக்கிரர்.

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now