நல்லதொரு குடும்பம்

171 28 2
                                    

🔱யின்
♥️கதிர் வேலனின் வைரம் முல்லை ♥️KVVM❤

எபிசொட் 24

வெள்ளிக்கிழமை காலை அனைவரும் சுறுசுறுப்பாய் கிளம்பிக்கொண்டு இருந்தனர் ,
தனம் லட்சுமி அம்மாக்கு டிபன் ஊட்டிக்கொண்டு இருக்க . கதிருக்கும் மூர்த்திக்கும் தேனீர் கொண்டு வந்தாள் முல்லை

மூர்த்தி: கண்ணா எங்கே பா

முல்லை: ஆச்சிரியம் ஆனால் உண்மை மாமா.... அவன் ரொம்ப
ஆர்வமாக படித்து கொண்டு இருக்கிறான் .

கதிர் : என்னா படிக்கிறானா, அப்போ இன்றைக்கு மழை பொழியும் …

அனைவரும் சிரிக்க ….
ஜீவாவின் அறையில் இருந்து மீனா காட்டு கத்து கத்திக்கொண்டு
இருக்க ...மூர்த்தி கதிரிடம் மதுரைக்கு போய் கொஞ்சம் சரக்கு வாங்கிக்கொண்டு வரவேண்டும், ஜீவாவுக்கு தான் அந்த அண்ணாச்சி பழக்கம் அவனை மதியம் அனுப்பி வைப்போமா என்று கதிரிடம் மூர்த்தி கேட்டுக்கொண்டு இருந்தார் …

கதிர் :அண்ணா ஜீவா அண்ணன் இருக்கட்டுகம் நான் போய் வரேன் …
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே ஜீவா அறைக்குள் இருந்து
வெளியே வந்தார் …

மீனா : நில்லு ஜீவா நான் பேசிக்கிட்டு  இருக்கிறேன்….. நீ வெளிய
போன என்ன அர்த்தம்...

ஜீவா: ஏய் ஏண்டி கத்துற ….

மூர்த்தி: ஜீவா நீ மதுரை வரைக்கும் போயிட்டு வரியா?

ஜீவா: சரி அண்ணா

மீனா: என்னா சரியா? நான் உன்னை ஷாப்பிங் இட்டுன்னு போன்னு
சொல்றேன் நீ பாட்டுக்குன்னு மதுரைக்குகிளம்ப போறேன் சொல்ற

தனம்: ஷாப்பிங்கா… நேற்று இரவே சொல்லியிருந்தா ...மாமா கதிரை
அனுப்பறேன்னு சொல்லப்போறாரு அதுக்கு ஏன் இப்படி கத்துற ?

லட்சுமி: இவ ஏன்தான் வயத்துள்ள பிள்ளையை வைத்துக்குன்னு இப்படி கத்துறன்னே தெரியல தனம்..

மீனா: ஆமா நான் மட்டும் உங்ககிட்ட எல்லா விஷயத்தையும் ஒரு
நாள் முன்பே சொல்லி உங்கள் permission வாங்கிட்டு வெளியே
போகணும்...ஆனால் நீங்க எல்லாம் உங்க இஷ்ட்டத்துக்கு ஜோடியா
வெளியே சுற்றிவிட்டு வருவீங்க இல்ல…... நல்ல ஆளுங்க நீங்க …

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now