அழகான மாலை வேளையில் தன் அலுவலகத்தில் கண்ணாடி ஜன்னலின் வழியே நகரத்தைப் பார்த்துக் கொண்டு ஒரு கையில் காபியை குடித்துக் கொண்டே தீவிரமாக எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தான் அவன் பிரசாந்த். எக்ஸ்கியூஸ்மீ சார் என்று கதவைத் தட்டிக் கொண்டு வந்தாள் அவள் மாயா. அவளைக் கண்டவனின் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது. சொல்லுங்க மாயா என்றவனிடம் சார் டைம் ஆச்சு அதான் என்றாள் மாயா. மணியைப் பார்க்க ஏழு எனக் காட்டியதும் சாரி மாயா நீங்க கிளம்புங்க என்றான். தாங்க் யூ சார் என்றவள் அவளது டிரேட்மார்க் கியூட் புன்னகையை சிந்தி விட்டு கிளம்பினாள்.
மாயா என் வாழ்வில் பல மாயங்களைச் செய்தவள் என்று நினைத்துக் கொண்டான் பிரசாந்த்.
பிரசாந்த் தனது காரில் தன் வீட்டிற்கு சென்றான். அவனை அன்புடன் வரவேற்ற அன்னை காயத்ரியின் கையைப் பிடித்தவன் அம்மா உங்க கிட்ட ஒரு விசயம் சொல்லனும் என்றான். சொல்லுப்பா என்ன விசயம் என்றவரிடம் மாயாவைப் பத்தி என்னம்மா நினைக்கிறிங்க என்றான் பிரசாந்த். ரொம்ப நல்ல பொண்ணு அவள் மட்டும் இல்லை என்றால் இன்னைக்கு நானே இல்லை. அன்னைக்கு அந்தப் பொண்ணு கொடுத்த இரத்தம் தான் என் உயிரையே காப்பாத்தி இருக்கு என்ற காயத்ரி என்னப்பா திடீர்னு மாயாவைப் பத்தியே பேசிகிட்டு இருக்க என்றதும் அவளை உங்களுக்கு மருமகளா மாத்தனும்னு ஆசைப் படுறேன் அம்மா என்றான் பிரசாந்த்.
மாயா மாதிரி ஒரு அன்பான அக்கறையான பொண்ணு எனக்கு மருமகளா வந்தால் கசக்குமா என்ன என்ற காயத்ரி இதை மாயாகிட்ட பேசிட்டியா என்றிட இல்லைம்மா. முதலில் உங்க கிட்ட பேசிட்டு அப்பறம் தான் மாயாகிட்ட சொல்லனும் என்றான்.
சரி பிரசாந்த் வா சாப்பிட என்ற காயத்ரி அவனுக்கு உணவினை பரிமாறிட அமைதியாக சாப்பிட்டான். அந்த நேரம் போதையில் தள்ளாடியபடி வீட்டிற்குள் வந்தான் பிரவீன். இவனை நினைத்தால் தான் எனக்கு உயிரே போகுது என்று வருந்தினார் காயத்ரி. அவனும் சரியாகிருவான் அம்மா என்ற பிரசாந்த் தனது தம்பியை சாப்பிட வைத்து அவனது அறையில் படுக்க வைத்தான். காதல் தோல்வி ஒரு மனிதனை இத்தனை குடிகாரனாக மாற்றிடுமா என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்ட பிரசாந்த். சொல்லாமல் மறைத்ததாலே இவனது காதல் தோற்றுப் போனது. நான் ஏன் இப்படி யோசிக்கிறேன் . நாளைக்கே என்னுடைய காதலை மாயாவிடம் சொல்லி விட வேண்டும் என்ற முடிவுடன் உறங்கச் சென்றான்.