சார் டைம் ஆச்சு என்றிட ஆகட்டும் அதனால் என்ன என்றவனிடம் என்னோட மொபைல் போன் கொடுங்க சார் வீட்டுக்கு இன்பார்ம் பண்ணிக்கிறேன் என்றவளிடம் முடியாது என்றவனை அவள் முறைத்திட என்ன என் முகத்தில் படமா ஓடுது நான் சொன்ன அந்த கொட்டேசன் ரெடி பண்ணுங்க என்றான் பிரசாந்த்.
சார் ப்ளீஸ் என்றவளிடம் சார் , மோர் லாம் இல்லை நான் சொன்ன வேலையை முடிச்சுட்டு மொபைல் வாங்கிட்டு கிளம்புங்க என்றான். இந்த வேலையை நாளைக்கு நான் சீக்கிரம் வந்து முடிச்சுக் கொடுத்திடுறேனே என்றவளிடம் இங்கே நான் தான் பாஸ் நான் சொல்றதைக் கேட்டு தான் நீங்க வேலை பார்த்து ஆகனும் மிஸ் மாயா என்றான் பிரசாந்த்.
சார் என்னோட சிச்சுவேசனை புரிஞ்சுக்கோங்க ப்ளீஸ் இன்னைக்கு கண்டிப்பா நான் சீக்கிரம் வீட்டுக்குப் போயே ஆகனும் என்றவளிடம் டூ வாட் ஐ சே என்றவனை முறைத்தவள் என்னை டெர்மினேட் பண்ணிடுறதுனா பண்ணிக்கோங்க சார் நான் கிளம்புறேன் என்றவள் என்னோட போன் என்று அவனது டேபிளின் மீது இருந்த போனை எடுக்கப் போக அவன் அதற்குள் அந்த போனை எடுத்துக் கொண்டான். அவள் கால் இடறி அவன் மீது விழுந்திட அவனும் ரோலிங் சேரோடு சேர்த்து கீழே விழுந்தான்.
பிரசாந்தின் மீது மாயா விழுந்திருக்க அவளது கண்களைக் கண்டவன் ஏதோ மகுடிக்கு மயங்கிய பாம்பினைப் போல் இருந்திட அவனை விட்டுப் பிரிந்து எழுந்தவள் தன் மொபைலை எடுத்துக் கொண்டு சென்று விட்டாள்.
பொறுக்கிப் பையன் எப்போ பாரு இப்படியே அலைவான் போல என்று நினைத்தவள் போனை ஆன் செய்து வீட்டிற்கு கால் செய்திட அவள் வீட்டிலிருந்து யாரோ வந்து அவளை அழைத்துச் சென்றனர்.
கண்ணாடி வழியே பார்க்கிங்கில் மாயா யாரிடமோ சிரித்து , சிரித்து பேசியபடி பைக்கில் அமர்ந்து செல்வதைக் கண்ட பிரசாந்திற்கு எரிச்சலாக இருந்த்து.
அவன் மீது அவள் விழுந்த பொழுது அவளது கழுத்தில் இருந்த மெல்லிய செயின் அவனது சட்டைப் பட்டனில் மாற்றி அறுந்து போயிருந்தது.