சார் உங்களுக்கு எப்படி என்றவளிடம் நீங்களும், லதாவும் பேசிட்டு இருந்த்தை நான் கேட்டுட்டு இருந்தேன் மாயா. நீங்க என் மேல இவ்வளவு நம்பிக்கை வச்சுருப்பிங்கனு நினைக்கலை என்றவனிடம் சாரி சார் அன்னைக்கு பஸ்ல நடந்த இன்சிடென்ட் வச்சு உங்களையும் தப்பா என்றவளிடம் ப்ளீஸ் மாயா அன்னைக்கு நடந்தது ஒரு ஆக்சிடென்ட் உங்க நிலைமை எனக்கு புரியுது ஆனால் எல்லா ஆண்களும் தப்பானவங்க கிடையாது என் அம்மா மேல சத்தியம் டிக்கெட் எடுக்க தான் கை வச்சேன் என்றான். பரவாயில்லை சார் சாரி என்றவள் கிளம்பிச் சென்றாள்.
அவன் சிரித்து விட்டு தனது வீட்டிற்கு சென்றான். அன்றிலிருந்து மாயா பிரசாந்திடம் ரொம்பவே மரியாதையாக நடந்து கொண்டாள்.
பிரசாந்த் வேலையில் கண்டிப்புடன் இருப்பதை மாற்றவில்லை. அவனது இயல்பான குணம் வேலையில் அதிக கண்டிப்புடன் இருப்பது என்று அறிந்து கொண்டவள் அமைதியாகவே தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள். அலுவலகத்தில் உள்ள அனைவரிடமுமே மாயா நட்புடன் சகஜமாக பழகி வந்தாள்.
நாட்கள் அழகாக நகர்ந்தது. மாயாவை அவனுக்கு பார்த்த உடனே பிடித்திருந்தது. அது வெறும் இனக்கவர்ச்சி என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டு சுற்றித் திரிந்தான் பிரசாந்த்.
அன்று மாயா வேலைக்கு வரவில்லை. லீவும் சொல்லவில்லை என்று பயங்கர கோபத்தில் அமர்ந்திருந்தான் பிரசாந்த். அவனது மொபைல் போன் ஒலித்திட அதில் அம்மா என்று பெயர் வரவும் அதை அட்டன் செய்தான்.
ஹலோ என்ற பெண்குரலில் இது அம்மா குரல் இல்லையே என்று நினைத்தவன் இது என் அம்மா போன் ஆச்சே நீங்கள் யார் என்றவனிடம் சார் உங்க அம்மா போன் தான் உங்க அம்மாவுக்கு ஆக்சிடென்ட் ஆகிருச்சு உடனே ஒரு பெரிய மருத்துவமனையின் பெயரைச் சொல்லிவிட்டு வரச் சொல்லி அந்தப் பெண் போனை வைத்து விட்டாள்.
அம்மா , அம்மா என்று பதறிய பிரசாந்த் அந்த மருத்துவமனைக்கு ஓடி வந்தான். ரிசப்சனில் காயத்ரி என்றதும் அந்த ஆக்சிடேன்ட் கேஸா ஐசியுல இருக்காங்க என்று சொல்லவும் ஐசியு வாசலுக்கு ஓடினான்.