மாயா மீது கடும் கோவத்தில் இருந்தான் பிரசாந்த். அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன். என்ன நடந்துச்சுனு கூட தெரியாமல் என்னை அடிச்சதோட மட்டும் இல்லாமல் உன் அம்மாகிட்ட இப்படி பண்ணுனு சொல்லி ச்சை என்ன பொண்ணு அவள். அவளைப் போயி பார்த்து அவள் பின்னாடியே போனதுக்கான பரிசு என்றவன் கோபமாக தன் அலுவலகத்திற்கு வந்தான்.
சார் இன்னைக்கு இன்டர்வியூ என்று வந்த அவனது மேனேஜர் சதீஷிடம் சரி வரச் சொல்லுங்க என்றான். மாயா மீது இருந்த கோபத்தை இன்டர்வியூவிற்கு வந்த நபர்களின் மீது காட்டிக் கொண்டிருந்தான். கிட்டத்தட்ட இன்டர்வியூவிற்கு வந்த அனைவரும் சோகமாக வெளியே வந்தனர். பாதி இன்டர்வியூ முடிந்த நிலையில் அதே அலுவலகத்திற்கு வந்து சேர்ந்த மாயா ரிசப்சனிஸ்ட் இடம் தன் பெயரைச் சொல்லி விட்டு அமர்ந்தாள்.
அடுத்ததாக அவளது பெயர் அழைக்கப் படவும் எம்.டி யின் அறைக்குள் நுழைந்தாள். அவளைக் கண்டவனின் முகம் கோவத்தில் சிவந்தது. அவளுக்கும் இவனோட ஆபிஸ்லையா வேலை என்று நினைத்தவள் திரும்பிச் செல்ல நினைத்தாலும் தன்னுடைய குடும்ப சூழ்நிலையை மனதில் நினைத்து அந்த இன்டர்வியூ அட்டன் செய்தாள்.
அவளிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை அப்பாயின்மென்ட் ஆர்டரை நீட்டினான் பிரசாந்த். அவளை முறைத்துக் கொண்டே மேனேஜர் சதீஷின் பக்கம் திரும்பியவன் இவங்களை செலக்ட் பண்ணியாச்சு இன்னைக்கே ஜாயின்ட் பண்ண ஏற்பாடு பண்ணுங்க என்றவன் இன்டர்வியூ ஓவர் என்றதும் சதீஷ் மாயாவை அழைத்துக் கொண்டு சென்றான்.
மவளே மாட்டுனியா இருடி என்னை அடிச்சு அசிங்கப் படுத்தினதுக்கு உன்னை விடவே மாட்டேன். ஒவ்வொரு நாளும் துடிக்க வைக்கிறேன் என்று நினைத்தவன் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
சதீஷ் மாயாவிற்கு வேலை பற்றி கூறிவிட்டு தன் கேபினுக்குச் சென்றான். மாயா சதீஸ் சொன்னது போல எம்.டியின் வொர்க்கிங் செட்யூல்டு, மீட்டிங் என எல்லாவற்றையும் சரி வர நேரம் ஒதுக்கி ஒரு செட்யூல்ட் போட்டு வைத்தவள் தன்னுடைய வேலையை பார்த்திட இண்டர்காமில் அவளை அழைத்தான் பிரசாந்த்.