அர்ஜுன் அமைதியாக மாயாவைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். என்னைப் பத்தின உண்மை முன்னமே தெரிஞ்சுருந்தால் உங்க வீட்டுக்கு உங்க மனைவியா நடிக்க கூட்டிட்டு வந்திருக்க மாட்டிங்கள் தானே அர்ஜுன் என்றாள் மாயா.
ஐயோ மாயா என்ன பேசுற என்றவனின் கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டவள் ஆறு மாதம் கழிச்சு கண்டிப்பா நானாகவே உங்களை விட்டுப் போயிருவேன் இல்லை இப்பவே கிளம்புனு சொன்னாலும் எனக்கு சந்தோசம் தான் ஆனால் தயவு செய்து என்னைப் பத்தின அந்த ரகசியத்தை மட்டும் சொல்லி என்னை அசிங்கப் படுத்திராதிங்க அர்ஜுன் ப்ளீஸ் என்றவளின் கண்கள் கண்ணீரைச் சிந்திட அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
மாயா ப்ளீஸ் அழாதிங்க என்றவன் அவளருகில் வந்து அவளது கண்ணீரைத் துடைத்தான். இதில் உன்னோட தப்பு என்ன இருக்கு மாயா சத்தியமா சொல்றேன் எந்த சூழ்நிலையிலும் இந்த விசயத்தைச் சொல்லி நான் பிரியவே மாட்டேன் என்றவன் தூங்கு மாயா என்றான்.
தாங்க்ஸ் அர்ஜுன் என்றவள் அமைதியாக படுத்துக் கொள்ள முதன் முறையாக அர்ஜுனின் மனதில் மாயா மீது ஒரு சின்ன அபிப்ராயம் வந்தது. மாயாவைப் பற்றிய உண்மையால் தான் அவளை தன்னோடு அனுப்பி வைத்த நீலிமா மீது கோபம் கோபமாக வந்தது.
அடுத்தடுத்து வந்த நாட்களில் அர்ஜுன் மனதில் மாயா அதிகம் இடம் பிடிக்க ஆரம்பித்தாள். அந்த குடும்பத்தில் ஒவ்வொருவரையும் நேசிக்க ஆரம்பித்தாள். ஒவ்வொருவரிடமும் அன்பு செலுத்தி அன்பால் அங்கு இருந்த அனைவரின் மனதிலும் இடம் பிடித்தாள்.
அம்மா நீங்க கொஞ்சம் கூட ரெஸ்ட்டே எடுக்க மாட்டேங்கிறிங்க ஏன் இப்படி பண்ணுறிங்க. நாங்க வந்து இரண்டு வாரம் ஆச்சு. உடம்பு சரியில்லாத இந்த நேரத்தில் நீங்க இப்படி உங்க உடம்பைக் கெடுத்துட்டு இருந்தால் என்ன அர்த்தம் என்ற மாயாவை தன் அருகில் அமர வைத்த சௌமியா ஒரு உண்மையை சொல்லவா மாயா என்றார்.