உணர்வாயா என் காதலை ஒருமுறை...

58 7 2
                                    

பைத்தியமாடி நீ அந்த கிறுக்கச்சி சொன்னாளாம் இவளும் சம்மதிச்சுட்டு வந்திருக்கிறாள் என்று பொரிந்து தள்ளினாள் திவ்யா. காண்ட்ராக்ட் போட்டு லவ் பண்ண காதல் என்ன வியாபாரமா அவள் தான் அறிவே இல்லாமல் கேட்டாளாம் இவளும் ஒத்துகிட்டு வந்திருக்காள். அவளுக்கு படிப்பு தான் முக்கியம்னா அர்ஜுனை பிரேக்அப் பண்ணிட்டு போக வேண்டியது தானே இது என்ன ப்ரோக்கர் வேலை ஆறுமாசத்துக்கு உன்னை லவ்வரா நடிக்கச் சொல்லிருக்கா என்ற திவ்யா உனக்கு வெட்கமா இல்லை. இப்போ நீ பண்ணுற வேலைக்கு பெயர் என்ன தெரியுமா என்ற திவ்யாவிடம் திவி ப்ளீஸ்டா நான் சொல்றதைக் கேளு.

எனக்கு சின்ன வயசுல இருந்து ஒரே ஒரு ஆசை தான். ஒரு கூட்டுக் குடும்பத்தில் வாழனும். ஒரு ஆறு மாசம் என் அர்ஜுன் கூடவும், அவனோட அந்த பெரிய குடும்பத்தில் நானும் ஒருத்தியா வாழனும்னு ஆசையா இருக்கு.

அது மட்டும் இல்லை அர்ஜுனோட அம்மாவுக்கு லங்க் கேன்சர் அவங்கள் இப்பவோ, அப்பவோனு இருக்காங்க அவங்கள் சாகும் போது சந்தோசமா சாகனும் அதற்குத் தான்டி சம்மதிச்சேன் என்ற மாயாவை முறைத்த திவ்யா அவனை நீ காதலிக்கிறதே எனக்கு பிடிக்கவில்லை. இந்த லட்சணத்தில் சரி எப்படியோ போ . நாளைக்கு பிரச்சனைனு என்கிட்ட தானே வந்தாகனும் அப்போ இருக்கு உனக்கு என்ற திவ்யாவைக் கட்டிக் கொண்ட மாயா உன்னை விட்டா எனக்கு யாரு இருக்காங்க திவி என்றாள் மாயா. எப்படியோ போ  என்ற திவ்யா தினமும் போன் பண்ணுடி உனக்கு என்னம்மோ , ஏதோனு தினமும் தவிச்சுட்டு இருப்பேன் என்றாள். திவிச் செல்லம் ஐ லவ் யூ டி என்று கூறிவிட்டு மாயா தன்னவனின் வீட்டிற்கு சந்தோசமாக கிளம்பினாள்.

அர்ஜுனிற்கு நீலிமா மீது கடும் கோபம் தான் வந்தது. இந்த பொண்ணு மாயாவை தேவை இல்லாமல் நம்ம வாழ்க்கைக்குள்ள கொண்டு வந்திருக்காள். இதனால என்ன என்ன விளைவுகள் வரப் போகுதோ என்று நொந்து கொண்டான் அர்ஜுன்.

மாயா என்றிட சொல்லுங்க அர்ஜுன் என்றாள். உங்களுக்கு எதுவும் பிராப்லம் இல்லையே என்றிட என்ன ப்ராப்லம் அர்ஜுன் என்றாள் மாயா. இல்லை ஆறு மாதம் என்றவனிடம் நீலிமா என்னோட ப்ரண்ட் அவளோட லவ்ல ஒரு சின்ன பிரச்சனை அதை நான் சால்வ் பண்ணுறேன் அவ்வளவு தானே என்றாள்.

உணர்வாயா என் காதலை ஒருமுறை..Where stories live. Discover now