அவ(ன்)ள்
பகுதி.1
வானம் நீல நிறத்தை விடுத்து மையிருட்டை பூசிய கருப்பு நிற ஆடையை அணிந்திருக்கும் இரவு வேளை. அவளைச் சுற்றி மின்மினிப் பூச்சிக்கள் பறப்பது போன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரு விளக்குகள் எரிந்துக் கொண்டு, தூரத்தில் நடந்து வருபவளை தைரியபடுத்திருந்தது. இருள் படர்ந்த அந்த நட்ட நடு இரவில் பத்து முறைக்கு மேல் விஷ்ணுவை அழைத்து விட்டாள் ,
லைன் கிடைக்கவே இல்லை... மழை வேறு சிறிதும் விடாது அடித்து பெய்து கொண்டிருந்தது. அந்த மழையிலும் பதட்டத்தின் காரணமாய் அவள் முகத்தில் துளிர்த்த வியர்வை முத்துக்களை கூட துடைக்கக் தோன்றாமல் "இந்த முறையாவது போனை எடு விஷ்ணு" என்றவளது குரல் கேட்டது போல இப்போது உயிர்ப்பித்தது அவனது அலைபேசி
"டேய் விஷ்ணு எங்கடா போன…? லைனே கிடைக்கலை... இன்னும் எனக்கு டிக்கட் கன்பார்ம் ஆகலைடா அதனால பஸ்ல தான் வறேன்" என்றாள் படபடக்கும் மனதுடன்
"இந்த நைட் வேலையில நீ ஏன் வர கா… நான் பாத்துக்குறேன் நீ நாளைக்கு காலையிலயே வண்டில வா இப்போ நீ வர்றது அவ்வளவு சேப் இல்ல கா என்றான் விஷ்ணு" சிறிது பயத்துடன்.
தம்பியின் பயம் அறிந்தவள் "நான் பாத்துக்குறேன் டா… பஸ்ல நிறைய பேர் இருப்பாங்க தைரியமா தான் வறேன்... எனக்கு அம்மாவை பாக்கனும் போல இருக்கு... இப்போ எப்படி இருங்காங்க விஷ்ணு?" என்றவளது குரல் கலங்கியது.
"எந்த முன்னேற்றமும் இல்லைன்னு சொல்றாங்க... இன்னும் ட்ரீட்மெண்ட் கொடுத்துக்கிட்டுதான் இருக்காங்க" என்றான் தாயின் நிலையை மறைக்காது
"அப்பா அப்பா என்ன டா பண்றார்" என்று தயக்கத்துடன் வினவினாள்.
"அவரை பார்க்கத்தான் பயமா இருக்கு கா... வாயை திறந்து ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன்றார் எங்கேயோ வெறிச்சி பாத்துட்டு உட்கார்ந்து இருக்கார்" என்றான் வருத்தத்துடன்.
தாய் தந்தையரின் நிலையை தம்பியிடம் இருந்து அறிந்து கொண்டவளுக்கு மனது கணத்து போனது. எப்படி வாழ்ந்த குடும்பம் யாருடைய கண் பட்டதோ இப்போது யாருக்கும் நிம்மதியில்லாமல் ஒரு வாழ்க்கையை வாழ்கிறோமே என்று வாடிய மலரை போல சோர்ந்து தாயின் கவலையில் இருந்தாள் பிருந்தா.
YOU ARE READING
அவ(னி)ளின்றி அமையாது என் உலகு (Complete)
General Fictionமுதல் திருமணம் தோற்று போக இனி வாழ்க்கையே இல்லை என்று நினைக்கும் நாயகியை கரம் பிடிக்க துடிக்கும் நாயகன்