அவனவள் 11

804 36 27
                                    


ஹலோ பிரெண்ட்ஸ்....  எப்படி இருக்கிங்க... நல்லா இருப்பிங்கன்னு தான் நம்புறேன்... நானும் நல்லா இருக்கேன்... கதை எப்படி போகுது இது ஒரு குறுநாவல்... ஒரு தளத்தில் பேட்டிக்காக எழுதியது எனக்கு நல்ல பெயரையும் வாங்கி தந்த கதை... இன்னும் 10 எபி ல கதை முடிஞ்சிடும்... நான் கரெட்டா யூடி போடுறது இல்லன்னு சொல்லிட்டு இருந்திங்க சரி ஓகே... ஆனா இப்போ தினமும் யூடி தந்தாலும் ஏன் கமெண்ட் வரமாட்டங்குது இந்த கதையோடு நான் இங்க கதை போடுறதை நிறுத்தலாம்னு இருக்கேன்... இதுவே கடைசி கதையாவும் இருக்கலாம்...  இந்த ஆப்ல இதுவரை கமெண்ட் தந்த அத்தனை வாசக பெருக்களுக்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள்.


அவ(ன்)ள் 11

உடலையும் மனதையும் குளிர்விக்கும் அதிகாலை பொழுதில் மேனியை உரசிய ஈரக்காற்று அவன் மனதினையும்  குளிர்வித்து இதத்தை பரப்பியது.

பால்கனியின் நின்றிருந்தவன்  பார்வையை தொலைதூரத்தில் புள்ளியாய் தெரிந்த  ஏதோ ஒன்றின் மேல் நிலைக்க விட்டிருந்தான்.

நேற்று அஞ்சலியிடமிருந்து பிருந்தாவை பற்றி தெரிந்துக் கொண்ட அடுத்த நொடியே  அவளை தன் இதய கூட்டிற்குள் பத்திர படுத்திக்கொள்ள வேண்டும் என்று நெஞ்சம் பரபரக்க… கைகள் அவளை தன்னுள் பொதிந்து  பாதுகாக்க துடித்தது.

அனைத்தையும் கூறிய அஞ்சலி அவன் பதிலுக்காவே விழியகற்றாமல் கிருஷ்ணாவையே பார்த்திருந்தாள். 

தோழியின் கவலைபடித்த முகத்தை கண்ட  கிருஷ்ணா "உன் பிரெண்டு கதையை கேட்டதும்  தெரிச்சி ஓடிடுவேன்னு  பயந்தியா அஞ்சலி…" என்றான் குற்றம் சாட்டும் பார்வையில்… என்னை இப்படி நினைத்துவிட்டாயே என்ற அர்த்தம்   பொதிந்த பார்வை அது

அதை எதிர்கொள்ள முடியாமல்  "கிருஷ்ணா அது" என்று தயங்கியவளை பேசவிடாது நிறுத்தியவன் 

"எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது பிருந்தா கூட மட்டும் தான் அஞ்சலி... அதை யாரலையும் மாத்த முடியாது…" 

அவ(னி)ளின்றி அமையாது என் உலகு (Complete)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin