அவ(ன்)ள் 5
இடைவரை நீண்டிருந்த கூந்தலில் நீர்த்திவளைகள் சொட்ட சொட்ட இறைவனின் சந்நிதியில் மனம் முழுவதும் வேண்டுதலுடன் நின்றிருந்தாள் பிருந்தா.
கிருஷ்ணா கூறியிருந்தபடியே மகேஷ்வரிக்கு இன்று ஆப்ரேஷன் என்று முடிவாகி இருக்க பயத்திலும், பதற்றத்திலும், மருத்துவமனையில் நிற்க முடியாமல் விஷ்ணுவை இருக்க வைத்துவிட்டு கோவிலுக்கு வந்தவளின் அலைபேசி அழைத்தது.
"ஹலோ... பிந்து"
பேசவே அரை நாழிகை பிடித்ததது அவளுக்கு "சொல்லு சொல்லு அஞ்சு?" வார்த்தைகள் பதற்றத்துடன் ஒலித்தது பிருந்தாவிற்கு
"பிந்து எங்க இருக்க?"
"ஹாஸ்பிட்டல் பக்கத்துல இருந்த கிருஷணர் கோவில்ல"
"அங்க என்னடி பண்ற? இன்னும் அரைமணி நேரத்துல ஆப்ரேஷன் ஸ்டார்ட் ஆகிடும் நீ இங்க இருக்க வேண்டாமா?"
"அஞ்சு எனக்கு பயமா இருக்கு…" என்று அவள் கண்களில் நீர் கோர்த்து குரல் தழுதழுக்கவும் தோழியின் நிலையை கண்டுக்கொண்டவள்
"அழாத பிந்து... முதல்ல நீ கிளம்பி இங்க வா… நான் இருக்கேன் கிருஷ்ணா இருக்கான் அப்புறம் என்ன… பாவம் விஷ்ணு, அவனை விட்டுட்டு போயிருக்க!" என்று அஞ்சலி சிறு கோபத்துடன் எடுத்து கூறவும்
"சரி அஞ்சு... வறேன்" என்று சுரத்தே இல்லாமல் கூறியவள் கால்கள் துவண்டது… வாடிய மலரை போல் இருந்தவள் மீண்டும் ஒரு முறை மனதார கடவுளை பிராத்திட்டு விட்டு மருத்துவமனையை நோக்கி நடந்தாள்.
நேற்று மருத்துவமனையில் கிருஷ்ணா ஆப்ரேஷனை பற்றி கூறிவிட்டு சென்ற பத்தினைந்தே நிமிடத்தில் திரும்பி வந்தவன் "நாளைக்கு காலைல பத்து மணிக்கு அப்ரேஷன் கன்பார்ம் பிருந்தா… நீங்க பணத்துக்கு இனி கவலைபட வேண்டாம்" என்றான் இருக்கையில் சாய்ந்து.
"டாக்டர்" என்றாள் பிருந்தா ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்த குரலில்
ESTÁS LEYENDO
அவ(னி)ளின்றி அமையாது என் உலகு (Complete)
Ficción Generalமுதல் திருமணம் தோற்று போக இனி வாழ்க்கையே இல்லை என்று நினைக்கும் நாயகியை கரம் பிடிக்க துடிக்கும் நாயகன்