அவனவள் 21

750 34 14
                                    

அவனவள் 21

காலத்தின் கட்டாயத்தில் நாட்களும் அதன் போக்கில் கரைந்து போயிருந்தது... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் பிருந்தாவை ஆச்சரியப்பட வைத்தான் கிருஷ்ணா..

இப்போது எல்லாம் தூக்கத்தை தொலைத்தவளாக வலம் வந்தாள் பிருந்தா.  அவள் எடுக்க மாட்டாள் என்று தெரிந்தும் விடாது அனுப்பும் மேசேஜ்களும் போன் அழைப்புக்களும்  நின்றபாடில்லை…  

நாள் பார்த்து நேரம் பார்த்து பிருந்தாவை நிச்சயம் செய்தனர் கிருஷ்ணாவின் வீட்டினர்… தினேஷின் தற்கொலை முயற்சிக்கு பின் பர்வதம் வெகுவாக அடங்கிவிட  வாசனும் பரசுவும் கல்யாண வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தனர்.  

விஷ்ணுவும் அவ்வப்போது அவர்களுடனும், கிருஷ்ணாவுடனும் இணைந்து வேலைகளை செய்து கொண்டிருந்தான்.

…..

மிகுந்த தயக்கத்துடன்  தன் அண்ணன் வீட்டிற்கு கிளம்பிக்கொண்டு இருந்தார் செண்பகம்.

கடையின் பொருப்பை மற்றொருவரிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டிற்கு வந்த  நாதன் "செண்பா ரெடியா?... கிளம்பளாமா?" என்று மனைவியை அழைத்தார்.

சுரத்தேயின்றி "கிளம்பளாம்" என்றவருக்கு முகத்தில் மருந்திற்கும் சிரிப்பு என்பது இல்லை…

"என்ன செண்பா உன் அண்ணன் வீட்டுக்கு போறோம்... துளி சந்தோஷம் இல்லாம  முகத்தை உம்முன்னு வைச்சிருக்க?" என்று மனைவியிடம் வினவிட

"எப்படி சந்தோஷமா கிளம்புறது.. என் பயமே அங்கதானே இருக்கு ... அவர் என்னென்ன பேசப்போறாரோ தெரியல... எங்க அண்ணிக்கு சொல்லி கொடுக்கவே தேவையில்லை கிருஷ்ணாவுக்கு பொண்ணு பாத்துருக்கேன்னு சொன்னாலே இல்லாத ஆட்டம் ஆடுவாங்க… இன்னைக்கு என்ன நடக்க போகுதோ…." என்று கவலையுடன் கூறியவர் கடவுளே நீதான் காப்பத்தனும் என்று தன் போக்கில் புலம்ப ஆரம்பித்து விட்டார் செண்பகம்.

மனைவியின் புலம்பலில் நாதனுக்கு சிரிப்பு வந்துவிட "என் பொண்டாட்டி  செண்பகமா பயப்படுறது!!... எவ்வளவு தைரியமா ஒரு நல்ல காரியம் பண்ற இதுக்கு போய் பயப்புடறதா?..." என்று அவரை தேற்றியவர்

அவ(னி)ளின்றி அமையாது என் உலகு (Complete)Where stories live. Discover now