அவனவள்23

846 34 12
                                    

அவ(ன்)ள் 23

கிருஷ்ணாவின் வார்த்தைகள் அவளை அமைதிப்படுத்தினாலும்  அவளால்  அந்த அறைக்குள் இயல்பாக  இருக்க முடியவில்லை…  முச்சு முட்டியது… அவன் கூறியதும் மறுவார்த்தை பேசாது மெத்தையில் படுத்துவிட்டாளே ஒழிய  தூக்கம் என்ற ஒன்று அவளை விட்டு தொலை தூரம் ஓடியிருந்தது…. அவன் கூறியது அனைத்துமே ஏற்றுக்கொள்ள கூடியதுதான் ஆனால் அவள் மனம் தான் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது…  இரவு வெகு நேரம் அழுகையில் கரைந்தவளது விழிகள் விடிவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் தான் உறக்கத்தை தழுவி இருந்தது.

அலைகடலின் ஆழுத்திலிருந்து அதன் கணம் தாளாமல் மேலெழும்பிய  சூரிய பந்தின் வரவு தன்னில் உலகமே அழகனாதொரு விடியலை சந்தித்திருந்தது, எப்பொழுதும் எழுந்துக்கொள்ளும் நேரமாதலால் கிருஷ்ணாவிற்கும் முழிப்பு தட்டிவிட, மெல்ல விழிகளை திறந்து தன்‌பக்கத்தில் துயில் கொண்ட மனையாளை  பார்த்தான். குளிருக்கு வாகாக இரு கைகளையும் ஒன்றாக சேர்த்து  உடலை குறுக்கி படுத்திருந்தவளின்  வதனம்‌ அவனை வெகுவாக ஈர்த்தது.  முடிகற்றைகள் கன்னத்தில் தவழ்ந்து விளையாட அறையில் ஊடுருவிய மெல்லிய வெளிச்சத்தில் கைதேர்ந்த கலைஞரின்  ஓவியமாய் அவனை கவர்ந்தாள் அவனின் ஒவிய பாவை.

மெல்ல முகத்தில் தவழ்ந்திருந்த  கார்கூந்தலை விலக்கியவன் கண்களுக்கு  கண்ணீர் கோடுகள் தப்பாமல் சிக்கியது. கன்னத்தில் படிந்திருந்த கண்ணீர் கோடுகளை  வைத்து இரவு முழுவதும் அழுகையில் கரைந்திருக்கிறாள் என்று அறிந்துக் கொண்டவனுக்கு மனம் வெகுவாக கனத்து போனது. எல்லாம் மாற வேண்டும் என் தேவதை என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்  என்ற எண்ணத்துடன்  தன் தேவதையின் பிறை நெற்றியில் பட்டும் படாமலும் முத்தம் வைத்தான் கிருஷ்ணா. அவன் அதரங்கள் தந்த ஈரத்தில் பிருந்தாவின் செவ்விதழ்கள்  அவளையும் அறியாது  மெல்லிய சிரிப்பில் வளைந்தது…

அதே மையலுடனே மனைவியைக் கண்டவன் மனதில் நேத்து "என்னென்ன பேசிட்டடி…  இப்போ ஒரு குழந்தை மாதிரி தூங்குறியேடி என் ஸ்வீட் பொண்டாட்டி… உன் மனசை எப்போ திறந்து என்னை ஏத்துக்கப்போற..... என்னை எப்போ நம்பப்போற| என்று தன் மனதோடு அவளிடம் பேசி மெல்ல தலையை வருடிவிட்டவன் கன்னத்தில் கை வைத்து கொஞ்சினான். அவன் ஸ்பரிசம் பட்டதலோ என்னவோ  இன்னும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள் பிருந்தா.

அவ(னி)ளின்றி அமையாது என் உலகு (Complete)Donde viven las historias. Descúbrelo ahora