அவனவள் 24

866 37 12
                                    

அவனவள் 24

காலமும் நேரமும் யாருக்கும் நிற்காமல் காற்றை விட வேகமாக பயணித்து காலண்டரில் இருந்து ஒரு மாதத்தை  காணாமல் செய்திருந்தது. மாலை நேரத்தின்  இதமான தென்றல் காற்று மேனியில் தழுவி  கார் கூந்தலை ஆசை தீர கலைத்து விளையாடியது.  தனக்கென போட்ட காபியின் நறுமணம்  நாசியை வருட மனப் பாரத்தால்  எட்டி பார்த்த தலைவலியும் சற்று அடங்கியது போல் இருக்க, மொட்டை மாடியில் அமரந்திருந்தவளின் போன் அடித்து தன் இருப்பை உணர்த்தியது. எடுத்து பார்க்க அஞ்சலி தான் அழைத்திருந்தாள். மலர்ந்த முகத்துடன் ஆன் செய்து ஹலோ அஞ்சு என்றாள் பிருந்தா.

"என்ன புதுப்பொண்ணே லைப் எப்படி‌ போகுது... என்னை எல்லாம் மறந்துட்ட போல" என்று கேளியுடன் பேச்சை தொடங்கி இருந்தாள் அஞ்சலி… வெகு நாளுக்கு பின்னான அஞ்சலியின் அழைப்பில் சந்தோஷம் கொண்டவள்,
ஹேய் அஞ்சு எப்படி இருக்க?... உன்னை போய் மறப்பேனா!.. என்ன இந்த பக்கம் வரதே இல்ல?... என்றாள் பிருந்தா உற்சாகம் நிறைந்த குரலில்.

"அதுக்கென்ன  வந்துட்டாப்போச்சி ஆனா  நான் கேட்ட கேள்விக்கு இன்னும்‌ பதில் வரலியே லைப் எப்படி போகுது… என் நண்பன் கிருஷ்ணா லவ்வர் பாய் என்ன சொல்றான்". என்றாள் பிருந்தாவை பற்றியும் தன் நண்பனின் மணவாழ்க்கை பற்றியும் அறிந்துகொள்ளும் நோக்கில்…

"அது அது எல்லாம் நல்லா தான்டி போகுது… எங்களுக்கு என்ன?" என்றாள் சமாளிக்கும் விதமாக தோழியின் கண நேர தடுமாற்றத்தையும், அவள் பேச்சையும் வைத்துக் கண்டு கொண்டவள்  "ம் சூப்பர் அப்புறம் என்ன பண்ணிட்டு இருக்க?"  என்றாள் அஞ்சலி அதை அறிந்தது போல் காட்டிக்கொள்ளாமல்.

"இப்போ எக்ஸாக்டா சொல்லனும்னா காபி குடிச்சிட்டு இருக்கேன் அஞ்சு" என்றதும் "இன்னைக்கு இவினிங் ஏதாவது பிளான் இருக்கா பிந்து?" என்று அஞ்சலி வினவியதும்

சற்றும்‌ யோசிக்காமல் "எந்த பிளானும் இல்ல அஞ்சு…  அவர் கூட இன்னைக்கு லேட்டா வருவாராம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போன் பண்ணாரு" என்று பிருந்தா கூறவும்… "ஓ... அப்படியா அப்போ இன்னைக்கு வெளியே போகலாமா?" என்று அஞ்சலி வினவிட,

அவ(னி)ளின்றி அமையாது என் உலகு (Complete)Donde viven las historias. Descúbrelo ahora