அவனவள் 12

750 33 17
                                    

அவ(ன்)ள் 12

"உங்க அப்பா வரப்போறாரு சீக்கிரம் எடுத்து உள்ள வை" என்று தினேஷின் கரங்களில் ஒரு கவரை திணித்தார் பர்வதம்.

"அம்மா... இதுல நான் கேட்ட அமௌண்ட் இருக்குல்ல?"

அக்கம் பக்கம் பார்த்தபடி அதிகம் சத்தமில்லாமல் "இருக்குடா எடுத்து வை... உங்க அப்பா வந்தா என்ன ஏதுன்னுட்டு உயிரை எடுப்பாரு" என்று மகனை எச்சரிக்கை செய்ய,

"சரிம்மா…. ஆனா  உனக்கு எப்படி காசு வந்துச்சி?... அதுவும் 15லட்சம்…" தினேஷ் வியப்புடன் கேட்க

"உங்க அம்மாவை என்னன்னு நினைச்ச?...  என் சாமர்த்தியம் இல்லன்னா நாமமெல்லாம் உங்க அப்பாவுக்கு இருக்க பாசத்துக்கு நாமத்தை தான் போட்டு இருக்கனும்... அப்பப்போ எடுக்கறது சீட்டு போடுறது அப்படியே கைல  இருந்த காசு, அது இல்லாம என் நகைய ஒரு ஐந்து லட்சத்துக்கு வைச்சி கொடுத்து இருக்கேன்... ஜாக்கிரதையா தொழிலை பண்ணு உன் அப்பன் வாயை பிளந்து பாக்கறா மாதிரி வந்து காட்டு" என்று பிள்ளைக்கு வாழ்த்தை கூறினார்.

அதே நேரம் வீட்டிற்குள் வந்த வாசனை பார்த்ததும் "சரி சரி... நீ போ தினேசு... நாளைக்கு தானே ஊருக்கு கிளம்பனும் எல்லாத்தையும் எடுத்து வை" என்றபடி மகனை உள்ளே அனுப்ப முயன்றார் பர்வதம்.

"எங்க போறான் உன் புள்ள" என்றபடி வாசன் அமர

"ம் ஊருக்கு…. அவனுக்கு தான் காசை கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டிங்களே…. அவன் கைக்கொண்டு அவனே பொழைச்சிக்க போறான்" என்று கடுகடுத்தபடி உள்ளே சென்றார்.

'இது எல்லாம் எங்க உருப்பட போகுது... தண்டமா இதுக்கு தொலைக்கறதுக்கு நாங்க பாடுபட்ட காசுதான் கிடைச்சிதா? போகட்டும் போகட்டும் கஷ்டம்னா என்னன்னு தெரிஞ்சிட்டு வரட்டும்...  அப்போதான் தெரியும்" என்று நினைத்த  வாசன் மனைவியின் முன் வாயை திறக்கவில்லை..

…..

"விஷ்ணு" என்று சத்தமில்லாமல் அழைத்தாள் பிருந்தா..

அவ(னி)ளின்றி அமையாது என் உலகு (Complete)Where stories live. Discover now