அவனவள்17

740 37 35
                                    

அவ(ன்)ள் 17

நல்ல யோசிச்சிதான் அந்த வீட்டுல நீ பொண்ணு  கேட்டியா செண்பா என்றார் நாதன் தன் மனைவியை பார்த்து சந்தேகமாக….

"என்ன அப்படி சந்தேகமா பாக்குறிங்க…  ஆரம்பத்துல நான் அரை மனசா தான் இருந்தேன்... ஆனா அந்த பொண்ணை பார்த்ததும்  மனசு இளகிடுச்சி… அதுமட்டும் இல்லாம  அவங்க பெரியம்மா பர்வதத்தோட பேச்சால அவ தான் என் மருமகன்னு முடிவே செஞ்சிட்டேன் அதான் கேட்டேன்" என்றார் உறுதியான குரலில்.

பிருந்தாவை விடுவதற்காக சென்ற இடத்தில் அந்த பெண்ணை பெண்கேட்டு விட்டு வந்தோம் என்று மனைவி சொல்லியதில் அதிர்ந்து செண்பகத்தை பார்த்தவர் 

மனைவியின் பரிபூரண சமதத்துடன் இந்நிகழ்வு நடந்ததா என்று தெரிந்துக் கொள்ள இந்த கேள்வியை கேட்டார்.

"நான் தப்பா கேக்கல செண்பா நீ இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொன்னியே... நாள பின்ன அந்த பொண்ணு வந்து வாழப் போற இடம்... நீயும் அந்த புள்ளையும பாக்கனும் பேசனும் நீ மனசுல ஒன்னை வைச்சிக்கிட்டு  பேசாம மூஞ்சிய திருப்பிக்கிட்டு போனா நல்லா இருக்காது ல... அதான் முன்னாடியே தெளிவா கேட்டேடுக்குறேன்" என்றார் விளக்கமாக.

கணவரின் விளக்கத்தில் அவரை முறைத்தவர் முகவாயை தோளில் இடித்தபடி "அந்த நெருடல் என் மனசுல இருந்தது என்னவோ உண்மை தாங்க… இல்லன்னு சொல்ல மாட்டேன் … ஆனா பிருந்தாவை நேர்ல பார்த்ததும் என் பார்வையே மாறிடுச்சி…..  நான் பார்த்தவரை ரொம்ப தங்கமான பொண்ணு... நல்ல குணமும் அழகும் நிறைஞ்சி லட்சணமா இருக்கா... அதுவும் இல்லாம நான் இந்த முடிவை எடுக்க அவங்க வீட்டு பிரச்சனையும் ஒரு காரணம்"

என்றவர். கணவருக்கு அங்கு நடந்ததை விளக்கமாக கூறினார்.

"பரவாயில்லை செண்பா நல்ல முடிவை தான் எடுத்து இருக்க எங்க நீ உன் சம்மதத்தை சொல்ல ரொம்ப நாள் எடுத்துக்குவியோன்னு நினைச்சேன்… இவ்வளவு சீக்கிரமே உன் சம்மதம் கிடைக்கும்னு எதிர்ப்பார்க்கல" என்றார் சற்று மகிழ்வுடனே…

அவ(னி)ளின்றி அமையாது என் உலகு (Complete)Where stories live. Discover now