அவனவள் 2

1.2K 36 5
                                    

அவ(ள்)ன் - 2

செண்பகம் தன் மெல்லிய குரலில் விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாடிய படியே சமையலறையில் கணவருக்கு சுடச்சுட காபியை தயாரித்துக் கொண்டிருந்தார்.

கணவர் சுவாமிநாதன் மார்கெட்டில் பலசரக்கு கடையை வைத்திருக்க, செண்பகம் இல்லத்தை நிர்வகித்து வந்தார். இவர்களின் ஒற்றை செல்வமகனாய் பிறந்தவன் தான் கிருஷ்ணா..

"என்னங்க எப்பவும் நம்ம சண்முகம் வந்து கடை சாவிய வாங்கிட்டு போவான்…  இன்னைக்கு இவ்வளவு நேரம் ஆகுது இன்னும் வரலியே" என்று கேட்டபடியே கணவரிடம் காபியை நீட்டினார் செண்பகம்.

தனது டிவிஎஸ் பிப்டியை துடைத்துக் கொண்டிருந்தவர் மனைவியிடமிருந்து காபியை வாங்கியபடியே "சண்முகத்தோட பிள்ளைக்கு முடியலையாம் செண்பகம்… இன்னைக்கு லீவு சொல்லிட்டான் அதான் நானே  கடையை தொறக்க போறேன்" என்றார். 

"சரிங்க... பார்த்து போயிட்டு வாங்க காலை பலகாரத்தை நானே கொண்டு வர்றேன்... நீங்க கடைக்கும் வீட்டுக்கும் அல்லாடாதிங்க" எனும் போது  வாசலில் ஆட்டோ வந்து நின்றது. அதில் இருந்து இறங்கியவனை பார்த்ததும் செண்பகம் முகத்தை திருப்பிக்கொண்டு உள்ளே சென்று விட்டார்.

ஆராய்ச்சியாய் மகனை பார்த்த சுவாமிநாதன்  "வா கிருஷ்ணா... என்னப்பா ஆட்டோல வர்ற? கார் என்ன ஆச்சி?" என்று கேள்வியை எழுப்பினார்.

"கார்  வழியில பிரேக் டவுன் ஆயிடுச்சிப்பா... டிரைவர் கார் எடுத்துட்டு வருவார் …  எனக்கு ஒரு எமெர்ஜென்ஸி கேஸ் அதான் நான் பஸ்ல வந்துட்டேன்". என்று நாதனுக்கு பதிலை கூறியவன் வீட்டிற்குள் நுழைந்து தாயை தேட செண்பகம் சமயலறையில் எதையோ உருட்டிக் கொண்டிருந்தார்..

அம்மா….

"….."

அம்மாஆ..…

"….."

என்று அவரை அழைத்துக்கொண்டே வந்தான் கிருஷ்ணா.

சத்தம் கொடுக்காமால் கோவமாய் இருப்பதை போல காட்டிக் கொண்டே செண்பகம்  முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு அவனுக்கு காபியை தயாரித்துக் கொண்டிருந்தார். 

அவ(னி)ளின்றி அமையாது என் உலகு (Complete)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ