அவனவள்16

748 33 37
                                    

அவ(ன்)ள் 16

வாசலில் கார் சத்தம் கேட்கவும் வெளியே வந்த பர்வதத்தின் கண்களில் இந்த காட்சிகள் பளிச்சென பட.

ஏய் பிருந்தா என்ன இது?  யார் இவன்?  இரெண்டு பேரும் இப்படி தான் உரசிக்கிட்டு போவிங்களா..? சே பாக்கவே கண்றாவியா இருக்கு"  என்று வார்த்தைகள் நாராசமாய் வந்தது.

"பெரியம்மா" என்று பிருந்தா கோவத்தில் பற்களை கடிக்க கிருஷ்ணாவின் முகம் இறுகியது. 

இதை கேட்ட செண்பகத்திற்கோ கோவம் வர "முதல்ல நீ யார் மா இவ்வளவு கேவலமா பேசுற??...  ஒரு பொம்பள புள்ளைய இப்படிதான் அசிங்கமா கேட்பியா?" என்றார் காட்டமாக

"நீங்க உங்க பசங்களா  கேட்காமா இருக்கலாம்… எங்க வீட்டு பொண்ணு இப்படி வந்தா கேட்கத்தானே செய்வோம்" என்று பர்வதம் வரிந்துக் கட்டிக் கொண்டு வந்தார்.

பர்வதம் கூறியதை கேட்டு கோபத்தின் உச்சிக்கே சென்ற செண்பகம்  "எங்க பிள்ளைகளை நான் கேட்கறது இருக்கட்டும், இவ்வளவு உரிமையா இந்த பொண்ணை கேக்குறியே நீ யாரு?"... என்றார்  ஆற்றமையுடன் 

" நான்  அவளோட பெரியம்மா " என்று பர்வதம் திமிராகவே பதிலளிக்க 

"ஆண்டி அவங்க அப்படித்தான் தேவையில்லாதது எல்லாம் பேசுவாங்க...  நீங்க மேல வாங்க…" என்று அங்கிருந்து செண்பகத்தை கிளப்ப முயன்றாள் பிருந்தா. 

அவளுக்கு  செண்பகத்தின் முன்பும் கிருஷ்ணாவின்‌ முன்பும் இப்படி நிற்கவைத்து கேள்வி கேட்கிராறே இந்த பெரியம்மா என்று பர்வதத்தின் மீது ஆத்திரமாக வந்தது.  கிருஷ்ணாவின் முகம் பார்க்க கூட பிருந்தாவிற்கு கூசியது.

"நீ சும்மா இரு பிருந்தா... யாரவது ஒரு ஆள் இப்படி கேட்டாதான் கொஞ்சம் உரைக்கும் அப்போதான்‌ அடுத்த வீட்டு பொண்ணை  இப்படி பேசக்கூடாதுன்றது  புரியவரும் என்று காட்டமாக பேசியவர்

" பெத்த அம்மாவா இருந்தா கூட கேட்கலாம்… ஆனா நீ பெரிரிரியயயய அம்மா தானே உன் பேச்சை எல்லாம் கேட்க முடியாது… அப்படி கேக்குற ரகமும் நாங்க இல்ல" என்று பர்வதத்தை போன்றே திமிராக பதிலை கொடுத்த செண்பகம். பர்வதத்தை  அற்ப புழுவை பார்ப்பது போல பார்த்துவிட்டு "கிருஷ்ணா, நீ பிருந்தாவை கூட்டிட்டு வா... கண்டவங்களோட நமக்கென்ன பேச்சி" என்று முன்னால் நடந்தார்.

அவ(னி)ளின்றி அமையாது என் உலகு (Complete)Where stories live. Discover now