episode 01

39 0 0
                                    


சாலையில் வாகனங்கள் அதி வேகமாக சென்று கொண்டிருந்தன. காலை வேளையாகையால் இளம் வாண்டுகள்  பாடசாலைகளுக்கும்  , இளைஞர்கள், யுவதிகள்  அலுவலகங்களுக்கும்  , வியாபாரிகள்  வியாபார நிலையங்களுக்கும்   என  அனைவரும் தம் கடமைகளை நோக்கி சிட்டாய் பறந்துகொண்டிருந்தனர்.

அவர்களுள் ஒருத்தியாக கறுப்பு நிற  டாப் அணிந்து அதற்கு ஏற்றாற் போல் வெள்ளை நிற பேன்ட் அணிந்து  வெள்ளை நிற சோளை கழுத்தில் சுற்றி தன் அடர்ந்து சுருண்ட கூந்தல்களை ஒரு கிளிப்பினால் அடக்கி நெற்றியில் சில முடிகளை  தவழ விட்டபடி வயதிற்கேற்ற அழகுடன் அவசரமாக நடந்து வந்து கொண்டிருந்தாள் பூஜா.

இவள் தான்  நம் heroin . அழகிலும் , அறிவிலும் நிறைந்தவள். ரொம்ப நல்ல குணம் கொண்டவள். அதே சமயம் கொஞ்சம் கோபமும் வரும். தந்தை பாஸ்கர் . business man , தாய் லட்சுமி . தம்பி ஷரன். கோலேஜ் படிக்கிறான்.

அப்பா பெரிய business man அ இருந்தாலும் பூஜாவிற்கு தன் சொந்த முயற்சியில்  முன்னுக்கு  வர வேண்டும் என ஆசை .  ஆகவே ஒரு IT கம்பனியில் வேலை செய்கிறாள்.

அவசரமாக சென்று கொண்டிருந்தவளை  நோக்கி வேகமாக ஒரு கார் வந்து அவளை உரசும் படியாக நின்றது.  அதிலிருந்து கண்ணில் கூளிங்கிளாஸ் மாட்டப்பட்டிருக்க, வெள்ளை நிற சேர்ட் & கறுப்பு நிற பேன்ட்  அணிந்து சேர்ட் கையை தன் முழங்கை வரை படித்து வைத்த படி  , நெற்றி முடிகள் காற்றில் அசைய கம்பீரமாக இறங்கினான் ராகவ் பிரதாப்  ( hero) . 

ராகவ்  CBI Officer . இவனுக்கு சொந்தனு சொல்லிக்க ஒரே ஒரு தங்கச்சி மட்டும்தான் இருக்காள் . இவன் படித்தது எல்லாம் மலேஷியாவில் தான்  . தற்போது இந்தியாவில் வேலை பார்க்கிறான் .  மேலும் இவனை பற்றி கதை நகர்வில் பார்க்கலாம்.

கார் வேகமாக வந்து நிறுத்தப்பட்டதால் அதிர்ந்த பூஜா அதில் இருந்து இறங்கியவனை கண்டதும் முறைக்க ஆரம்பித்தாள்.

அவள் முறைப்பை ரசித்த ராகவ் அவளை பார்த்து கண்சிமிட்டினான்.

என் ஆயுள் ரேகை நீயடி 💙Where stories live. Discover now