அடுத்த நாள் ராகவ் சரவணன் விஜி வீட்டை தேடி சென்றனர்...
அக்கம் பக்கத்தில் அவளை பத்தி விசாரித்தனர்
ஒருவர்: ரொம்ப நல்ல பொண்ணு தம்பி... பாவம் வாழ வேண்டிய வயசுல போய் சேந்திடிச்சு.. விதி யார விட்டிச்சு.. அவங்கவங்க தலைல என்ன எழுதிருக்குன்னு யாருக்கு தெரியும்???
அனைவருக்கும் அவளை பற்றிய முழு விபரம் தெரியவில்லை..
ராகவ் சரவணன் அந்த வீட்டை திறந்து உள்ளே சென்றனர்..
சரவணன்: என்னடா இது இப்படி இருக்கு கண்ணே தெரிய மாட்டேங்குது..
ராகவ்: வேற வழி இல்ல தம்பி குனிஞ்சு நிமிர்ந்து தான் போகனும் வா..
சரவணன்: இதுக்குள்ள என்னன்ன இருக்கோ தெரியலையே. பாம்பு அப்படி இப்படி இருந்தா...
ராகவ்: ஸ்கூல் பசங்க மாதிரி பேசாம பொறுப்பான ஆபீசரா பேசுடா . அந்த திருப்பய வீட்டை பார்த்தாலே தெறிச்சு ஓடுவான்னு தான் உன்னை மட்டும் கூட்டிட்டு வந்தேன்..
சரவணன்: என்னதான் பெரிய பருப்பா இருந்தாலும் ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு வீக்னஸ் இருக்கும்ல...
ராகவ் அவனை அனல் கக்கும் பார்வை பார்த்தான்..
சரவணன்: 😁😁😁 நான் இனி பேசல🤐🤐
ராகவ் மேலும் முன்னே சென்று தேடிப்பார்த்தான்...
சரவணனுக்கு கால் வந்தது...
சரவணன்: ராகவ் அண்ணானகர் dsp call பண்றாருடா.. பேசிட்டு வரேன்..
ராகவ்: ம்ம்...
ராகவ் விஜி ரூம் சென்று பார்த்தான்... அவள் ரூம் முழுவதும் ப்ரவீன் & விஜி போட்டோஸ் நினைந்திருந்தது.. அதை பார்த்தலே அவர்களின் காதலின் ஆழம் புரியும்...
ராகவ் அவற்றை தன் போனில் போட்டோ பிடித்தான்....
அங்கிருந்த பீரோவின் அருகில் சென்றவன் தூசை தட்டி ஹெயார் பின்னின் மூலம் அதை திறந்தான்.. பழைய பூட்டாக இருந்ததால் சாவி நுழைய மறுத்தது...
YOU ARE READING
என் ஆயுள் ரேகை நீயடி 💙
Science Fictionஆக்க்ஷன், காதல், அறிவியல் , சோகம் அனைத்தும் கலந்து புதுப்பது திருப்பங்களுடன் நகரும் கதை.. எதிர்பாராதவைகளை எம்மிடம் எதிர்பாருங்கள்😉🤭