episode 14

3 1 0
                                    


at raagav's Office...

ராகவ் தலையில் கை வைத்தபடி பயங்கர யோசனையில் ஆழ்ந்து கொண்டிருந்தான்...

திரு கதிரையின் மேல் காலை வைத்து கால் முட்டியில் கையைகுற்றி முகத்தை தாங்கிய படி பிரம்மை பிடித்தவன் போல் அமர்ந்திருந்தான்...

வெளியில் சென்று வந்த சரவணன் இவர்களின் நிலையை பார்த்தான்..

சரவணன்: டேய்  என சத்தம் வைக்க திரு அம்மா நான் இல்லை என்னை ஒன்னும் பண்ணிடாதீங்க தலைவரே என புலம்பிய படி ராகவின் மேசையின் கீழ் ஒழிந்து கொண்டான்..

ராகவ் எதுவும் அறியாமல் யோசனையிலேயே அழ்ந்திருந்தான்..

சரவணன் சிரித்தான்..

சரவணன்: டேய் டேய் நான் தான்டா வெளில வா...

திரு தலையை வெளியில் எடுத்து எட்டி பார்த்தவன்... பெருமூச்சு விட்ட படி வந்து அமர்ந்தான்..

சரவணன்: ஏன்டா இப்படி பயப்படுற.  நீ போலீஸ்டா .

திரு: அட சும்மா இருய்யா... இப்போ அது ஒன்னு தான் குறை.. அந்த பண்ணாட கன்னை எடுத்து சுட்டதுல இருந்து எனக்கு பக்கு பக்குன்னு இருக்கு... ஸ்டேஷன் போய் அக்கியூஸ்டுங்களை விசாரிக்கவே பயம்மா இருக்கு இதுல நீ வேற சும்மா ஏத்தி விடுற. .

சரவணன்: இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை...

திரு: 😏😏😏

சரவணன்: டேய் ராகவ் இன்னும் எவ்வளவு நேரம் டா இப்படியே இருக்க போற... எந்திருச்சு வாடா.. அந்த தற்கொலைகேசை பத்தி இன்வஸ்டிகேஸன் பண்ணணும்..

ராகவ்: அவன் ஏன்டா அவனையே அவன் சுட்டுக்கனும்.. ஒரே குழப்பமா இருக்கு...

சரவணன்: டேய் அவன் ஒரு சைக்கோ டா... தான் என்ன பண்றேன்னு தெரியாம பண்ண வேலை டா அது.. அதை புடிச்சு தொங்கிட்டு இருக்காம வெளில வாடா...

ராகவ்: ஏன்டா நீ உன்மைலயே படிச்சு தான் DSP ஆனியா இல்ல அப்பன் காசுல ஆகுனியா..

சரவணன்: யார பார்த்து என்ன கேள்வி கேக்குற ராப்பகலா கண்முளிச்சு படிச்சு வாங்கின போஸ்டிங்டா.. எங்கப்பன் என்னை நம்பி பணம் போடுவானா...

என் ஆயுள் ரேகை நீயடி 💙Where stories live. Discover now