episode 22

5 1 0
                                    


அடுத்த நாள் ராகவ் வழக்கம் போல் ஆபீஸ் வந்தான்... கேஸ் பைல்களை பார்த்துக்கொண்டிருந்தான்...

திரு கால் பண்ணான்..

📲📲📲

ராகவ்: சொல்லு திரு...

திரு; ராகவ் உடனே ஸ்டேஷன் வா... சத்விக் நிவிக்கு கால் பண்ணிருக்கான்...

ராகவ்: ஓகேடா நான் உடனே வர்றேன். சரவணனனுக்கும் விசயத்தை சொல்லிடு..

திரு; ஓகேடா..

ராகவ் அடுத்த நொடி சீறிப்பாய்ந்து சென்றான்..

••••••••••••••••••••

ராகவ் கார் ஸ்டேஷன் வாசலில் வந்து  நின்றது.. திரு வெளியே வந்தவன் அவனை அழைத்துச்சென்றான்..

சரவணன் உள்ளே இருந்தான்.

ராகவ் உள்ளே சென்றவன் அங்கிருந்த அதிகாரிகளிடம் இருந்து 🎧 காதில் மாட்டிக்கொண்டு கூர்மையாக கேட்கத்தொடங்கினான்..

அத்துடன் சத்விக் நம்பரை ட்ரேஸ் பண்ண சொன்னான்.. திரு உடனே சென்றான்..

📲📲📲

சத்விக்: ஹாய் பேபி.. எப்படி இருக்க..

நிவி: நான் எப்படி இருந்தா உனக்கு என்ன போடா..

சத்விக்: கோவிச்சுக்காத பேபி என் சிட்டுவேஷன் பத்தி தெரியும்ல...எங்க என்னை பிடிக்க உன்னை ஏதும் பண்ணிடுவாங்கன்னு பயம் அதனால தான் விலகி இருக்கன்..

நிவி: இதையே சொல்லு... சரி சரி நாம மீட் பண்ற நாள் இன்னும் 2 டேய்ஸ்ல வருது நியாபகம் இருக்கா..

சத்விக்: அதை எப்படி மறப்பேன்.. அதை பத்தி பேச தான் கால் பண்ணேன்..

நிவி: சரி இந்த வாட்டி எங்க வரணும்..

சரவணன்: மெயின் ஸ்ட்ரீட் வந்திடு..

நிவி: ஹேய் அங்க ரொம்ப கூட்டமா இருக்கும்...அங்க எப்படி நாம ப்ரீயா பேச முடியும்..

சத்விக்: நீ அங்க வா பேபி  வந்து எனக்கு ஒரு கால் பண்ணு நான் அப்பறம் போன்லயே ஒவ்வொரு ரூட்டா சொல்லுவேன் நீ அதை பாலோ பண்ணி வா.. சரியா.. நிச்சயம் உனக்கு பிடிச்ச ப்ளேஸ் தான்.. ப்ரியா பேசலாம்...

என் ஆயுள் ரேகை நீயடி 💙Where stories live. Discover now