episode 16

2 1 0
                                    


ராகவ் அந்த போட்டோவை பார்த்தவன் அதிர்ந்து நின்றான் ..

ராகவ்: இ.. இது எப்படி ...

சரவணன்: நானும் பார்த்த உடனே ரொம்ப சாக் ஆகிட்டன்...இந்த மாதிரி ஒரு விசயம் இந்த கேஸ்ல இருக்கும்னு நான் நினைச்சு கூட பார்க்கலடா..

ராகவ் அந்த போட்டோவையே பார்த்தான்..

அதில் மனோகர் மகன் ப்ரவீன் நிற்க பக்கத்தில் விஜி( சத்விக்கின் அக்கா) அவனை அணைத்து அவன் முகத்தில் முத்தம் கொடுப்பதை போல் இருந்தது... ப்ரவீன் சிரித்த படி நின்றிருந்தான்..

ராகவ்: ப்ரவீனுக்கு கல்யாணம் ஆகிடுச்சே.. அப்பறம் எப்படி...

சரவணன்: ஒரு வேளை ப்ரவீனோட பாஸ்ட் லவ்வா விஜி இருக்கலாம் இல்லயா..

ராகவ்: அப்படின்னா விஜி சாவுக்கும் மனோகர் பேமலிக்கும் ஏதோ ஒரு தொடர்பிருக்கு..

சரவணன்: என்ன முழுசா நடந்திச்சுன்னு தெரியாதேடா எப்படி தெரிஞ்சுக்குறது.

ராகவ்: வேற வழி இல்லை ப்ரவீன் கிட்ட கேட்க வேண்டியது தான்..

சரவணன்: உண்மைய சொல்லுவானா..

ராகவ்: இந்த கேசோட சீரியஸ்னஸ் என்னன்னு அவனுக்கு நல்லாவே தெரியும் . போனது அவங்கப்பா உயிர்.. சோ கண்டிப்பா சொல்லுவான்..

சரவணன்: அப்படினா போகலாம்..

•••••••••••••••••••••••••

ராகவ் & சரவணன் ப்ரவீன் வீட்டுக்கு சென்றனர்..

வீட்டில் அவன் தாய் மற்றும் மனைவி இருந்தனர்..

ப்ரவீன் மனைவி: வாங்க சார் உள்ள வாங்க...

ராகவ்: ப்ரவீன் இல்லயா அவருக்கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும்..

ப்ரவீன் மனைவி: அவரு பிஸ்னஸ் விசயமா வெளியூர் போய்ட்டாரு... நேற்று ராத்திரிதான் போனாரு..

சரவணன்: எப்போ திரும்புவாரு..

ப்ரவீன் மனைவி: இரண்டு நாள் ஆகும்..

ராகவ்: சரி அவரு வந்ததும் உடனே என்னை வந்து சந்திக்க சொல்லுங்க..

என் ஆயுள் ரேகை நீயடி 💙Where stories live. Discover now