நேரம் யாருக்கும் காத்திருக்காமல் நகர பொழுதும் இனிதே மலர்ந்தது...ராகவ் காலையில் எழுந்தவன் ரெடியாகிக்கொண்டு தன் ஆபீஸ் சென்றான்...
சரவணன் ஏற்கனவே தகவல் சொல்லியிருக்க.. தனது ஆபீசிற்கு சென்றவன் நேராக சீக்ரட் ரூமிற்கு சென்றான்...
அங்கு இரத்தம் ஒழுக முகம் உடம்பு முழுவதும் காயங்களுடன் சுத்தமாக எனேர்ஜி இல்லாமல் துவண்டு போய் கைகால்கள் கதிரையோடு கட்டப்பட்ட நிலையில் கண்கள் சொருக ஒரு இளைஞன் இருந்தான்..
சரவணன் : ராகவ் நேத்து பாத்த 2 காரையும் தரோவா திரு விசாரிச்சுட்டான் .. ஒன்னு பழைய அம்பாசிடர் கார் .. அதுல ஒரு வயசானவரு தான் ட்ரைவ் பண்ணிட்டு போயிருக்காரு.. அவரு அன்னைக்கு நைட் வேலூர்ல இருக்குற தன் ப்ரண்டோட பேத்தி கல்யாணத்துக்கு தான் போயிருக்காரு....
அன்னைக்கு நைட்டே அவரு அங்க வந்து சேந்துட்டதா எல்லாரும் சொன்னாங்க... சொந்தம்னு சொல்லிக்க ஒரு பேத்தி மட்டும் தான்... அவளும் அமேரிக்கால படிக்கிறாள்.. சோ இங்க இவரு மட்டும் தான் இருக்காரு...
சுத்தி விசாரிச்சதுல அவரு கொலையாளி இல்லன்னு தெரிஞ்சது...ராகவ்: ம்ம்...
சரவணன்: அடுத்த கார் இவனோடது தான்...செம்ம ஸ்பீட்டா போச்சு... சிவா காணாம போன அன்னைல இருந்து இவனும் இல்லை... நேத்து டெட்போடி நமக்கு கிடைச்ச அப்பறம் தான் இவன் தன்னோட வீட்டுக்கே வந்திருக்கான்... அம்மா அப்பா இல்லை... ஒரு மாமா மட்டும் தான்... பல கோடி சொத்துக்கு ஒரே வாரிசு...விசாரிச்சதுல இவனை பத்தி சுத்துவட்டாரத்துல ஒரு மாதிரியா தான் பேசிக்குறாங்க...
& அதுக்கும் மேல சிவாவோட உடம்புல இருந்த கைரேகை இவனோடது தான்...சிவாவோட செல்போனுலையும் இவனோட கைரேகை கிடைச்சது...
ராகவ்: ஏதாவது சொன்னானா..
சரவணன்: இல்லைடா.... வாயையே திறக்க மாட்டேங்குறான்..
ராகவ்: ஆஹான்... என கேலியாக தலையை சரித்து அவனை பார்த்தவன் அவன் அருகில் சென்றான்...
YOU ARE READING
என் ஆயுள் ரேகை நீயடி 💙
Science Fictionஆக்க்ஷன், காதல், அறிவியல் , சோகம் அனைத்தும் கலந்து புதுப்பது திருப்பங்களுடன் நகரும் கதை.. எதிர்பாராதவைகளை எம்மிடம் எதிர்பாருங்கள்😉🤭