நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது.. ராகவ் எடுத்த அந்த கேசில் எந்த வித முன்னேற்றமும் இல்லை...மேல் இடத்திலிருந்து அவனுக்கு ப்ரஷர் கொடுத்து குடைகுடையென குடைந்தனர்... 3 பேரும் பசி தூக்கம் மறந்து அயராது பாடு பட்டும் ஒரு துரும்பை கூட புரட்ட முடியவில்லை...
at Thiru's station..
திரு : ஆஆஆ ஆண்டவா என்னால முடில ச்சைய் என தன் தலையிலிருந்த தொப்பியை கழட்டி எறிந்தான்...
தன் டேபிளில் அமர்ந்தவன் பெரிய சரக்கு பாட்டிலை எடுத்து மேசையில் வைத்தான்...
கான்ஸ்டபிள்:. சார் என்ன சார் பண்ணப்போறீங்க சரக்கடிக்க போறீங்களா...
திரு: பின்ன என்னய்யா .. அந்த எழெவெடுத்தவனுகள் நிம்மதியா போய் சேந்துட்டானுக... இவனுங்களை கண்டுபிடிக்க போய் நான் தொக்கா மாட்டிக்கிட்டேன்.. அதுல அந்த சரவணன் என்னை சாவடிக்கிறான் .. நிம்மதியா தூங்க முடில சாப்பிட முடில அட இவ்வளவு ஏன்யா.. நிம்மதியா கக்கூஸ் கூட போக முடில...
இந்த உலகத்துல எல்லாரும் நிம்மதியா போற இடம் அது ஒன்னுதான் இந்த பண்ணாட நாய்ங்களால என்னால அதுக்கு கூட போக முடிலயா... இந்த இன்சு வேலைக்கு வந்ததுக்கு நாலு எருமை மாட்ட வாங்கி மேச்சுருக்கலாம்...
கான்ஸ்டபிள்: சரி சார்... சரக்கடிக்குறதுன்னு முடிவே பண்ணிட்டீங்க... ராவா அடிக்காம கொஞ்சம் வாட்டர் யூஸ் பண்ணுங்க...
திரு: யோவ் நான் இப்ப ராவா 10 பாட்டில் அடிச்சா கூட எனக்கு போதை ஏறாதுய்யா... செம்ம தலை வலில இருக்கேன் போய் உன் வேலையப்பாரு...
அவரும் தன் வேலையை பாக்க சென்றார்...
திரு ஒரு பாட்டிலை ஓப்பன் பண்ணியவன் அப்படியே அதை மடமடவென ஒரே மூச்சில் குடித்து முடித்தான்.. ஆனால் அவனுக்கு போதை சிறிதும் ஏறவில்லை..
அடுத்த பாட்டிலை எடுக்கும் போது அங்கே சரவணன் வந்தான்.. திரு அவனை பார்த்தான்...
சரவணன்: 😁😁 ஹாய் நண்பா...
திருக்கு கோபம் சுற்றென ஏறியது இருந்த வெறியில் காலி போட்டிலை அவனை நோக்கி வீசினான்.. சரவணன் சட்டென குனிய அது பறந்து எதிரில் இருந்த சுவரில் பட்டு சிதறியது...
YOU ARE READING
என் ஆயுள் ரேகை நீயடி 💙
Science Fictionஆக்க்ஷன், காதல், அறிவியல் , சோகம் அனைத்தும் கலந்து புதுப்பது திருப்பங்களுடன் நகரும் கதை.. எதிர்பாராதவைகளை எம்மிடம் எதிர்பாருங்கள்😉🤭