next day... at meeting room...
அனைவரும் ஒன்று கூடி இருக்க ராகவ்வும் வழமை போல் சற்றும் கம்பீரம் குறையாமல் கண்ணில் கூலருடன் ஆளை அசரடிக்கும் திமிறுடன் அங்கு வந்து சேர்ந்தான் ..
அனை பார்த்ததும் எல்லோரும் அவர்களையும் அறியாமல் எழுந்து நின்று சல்யூட் அடித்தனர்... ராகவ் சின்ன தலையசைப்புடன் அவற்றை ஏற்றுக்கொண்டான்...
ப்ராஜெக்ட்டரை ஆன் பண்ணியவன் பேசத்தொடங்கினான்..
ராகவ் : கொலை நடந்த நாலு இடங்களையும் தரோவா செக் பண்ணி உரியவங்க உரிய நேரத்துக்கு ரிப்போட் அனுப்பிட்டீங்க... ஐம் சோ ஹாப்பி எபவ்ட் இட்.. இப்படி நீங்க சின்சியரா இருக்கிறது.. எனக்கு ரொம்ப தெம்பா இருக்கு.. கூடிய சீக்கிரம் இந்த கேசை முடிச்சிடலாம்னு தோனுது...
சரவணன்: நிச்சயம் சார்...எங்களால முடிஞ்ச சப்போட்ட நாங்க கண்டிப்பா கொடுப்போம்... அனைவரும் அதனை ஏற்று தலையசைத்தனர்..
ராகவ்: சின்ன சிரிப்புடன் பேசத்தொடங்கினான்...
ராகவ்: இந்த நாலு இடத்தையும் சேர்ச் பண்ணதுல இந்த நாலு கொலையும் ஒரே புள்ளில தான் சந்திக்குது.. சோ இந்த நாலு கொலைக்கும் ஒருவனோ இல்ல ஏதோ ஒன்னுதான் சம்பந்தப்பட்டிருக்கனும்... ஐ மீன் இந்த நாலு கொலைக்கும் தனித்தனி ஆளுங்களால நடக்கல்ல....
DSP 2: புரில சார்....
ராகவ்: பைன்... இந்த நாலு இடத்தை சேர்ச் பண்ணதுல ஒரு சில விடயங்கள் ஒரே மாதிரி இருக்கு... அம்பத்தூர் மனோகர் வீட்ட சேர்ச் பண்ணப்போ எடுத்த போட்டோஸ் தான் இது என போட்டோசை திரையில் ஓட விட்டான்...
ராகவ்: என்ட் இது அவரோட வீட்டுல தேடினப்போ கிடைச்ச பொருட்கள்... சிக்கரட், அப்பறம் அவரு கடிச்சு போட்ட அவரோட நகத்துண்டுகள், ஸ்ராங் பேர்பியூம் & பைனலி இந்த நியூரோன் பத்தின சயன்டிபிகல் புக்....
DSP 3 : சார் இதே பொருட்கள் தான் லாயர் கணேசன் வீட்டுலயும் கிடைச்சது.. ஐ கான்ட் பிலீவ் திஸ்...
ராகவ்: யெஸ் மிஸ்டர்... இது கணேசன் வீட்டுல மட்டும் இல்லை கொலை நடந்த நாலு இடத்துலயும் இது கிடைச்சது... பர்ஸ்ட் சிக்கரட்... மனோகரோட வீட்டுல விசாரிச்சதுல அவருக்கு சிக்கரட் பிடிக்கிற பழக்கம் இருந்துச்சு பட் இந்த மாதிரி லிமிட் தாண்டி குடிக்கிற பழக்கம் இல்லன்னு தெரிய வந்திச்சு... அடுத்து ஸ்டாங் பேர்பியும் அலேர்ஜி பட் வன் மன்தா அதை யூஸ் பண்றதா சொன்னாங்க... & மிட்நைட் டைம்ல எழுந்து சயன்டிபிக் பத்தின ரிசேர்ச் செய்றதா சொன்னாங்க...
YOU ARE READING
என் ஆயுள் ரேகை நீயடி 💙
Science Fictionஆக்க்ஷன், காதல், அறிவியல் , சோகம் அனைத்தும் கலந்து புதுப்பது திருப்பங்களுடன் நகரும் கதை.. எதிர்பாராதவைகளை எம்மிடம் எதிர்பாருங்கள்😉🤭