படித்ததில் மிக பிடித்தது ......
{ படித்த போதே என்னை கண்கலங்க வைத்த
ஆழகான குட்டி சம்பவங்கள் ........ படிக்கும் போது
பாருங்கள் . உங்களை கூட உணர்ச்சிவச பட
வைக்கும் .}சம்பவம்-1
----------------
24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியே
பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"
மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன
என்று!"
அவனருகில் இருந்த அவனது அப்பா
சிரித்துக்கொண்டார்.ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம்
தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப
பட்டுக்கொண்டனர். மறுபடியும் அந்த
வாலிபன் கத்தினான்."அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்
நம்மோடு வருகின்றன..; என்றான்.
இதைக்கேட்டு தாங்க முடியாத
தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம் "நீங்கள்
ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம்
காட்டக் கூடாது என்றனர்" அதற்கு அந்த
வயதான அப்பா சிரித்துக்
கொண்டே சொன்னார். "நாங்கள் டாக்டரிடம்
இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்.என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு
தான்அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."அன்பு நண்பர்களே., உண்மையில் ஒவ்வொரு
மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை
தீர்மானிக்க
நினைத்தால் நாம் உண்மையை
இழந்துவிடலாம். சில
நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட
வைக்கலாம்.'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்
எடைபோடதிற்கள.சம்பவம்-2
----------------
ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு
ஆப்பிள் வைத்திருந்தாள்.. அங்கு வந்த
அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள்
வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்.
தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,
பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்..
பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும்
கடித்து விட்டாள்..
தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து
போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த
முடியாமல் தவித்தாள்.
உடனே அந்த சிறுமி, தாயிடம்
சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான்
இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்....
நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டுமானாலும்
இருக்கலாம். எவ்வளவு அனுபவமும்
இருக்கலாம்..அறிவு வீஸ்தீரமாகவும்
இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி
கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.
அடுத்தவருக்கு போதுமான அளவு
இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.
நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம்
தவறாகவும் இருக்கலாம்.
எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல்,
அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..
மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய
கணக்கு தவற்க்கூடாது.