*** #காதலித்து திருமணம் செய்த அன்பான ஒருவனின் டைரியில் ஒரு பக்கம் ***
திருமணம் முடிந்து 2 மாதங்கள் வேகமாக நகர்ந்து விட்டது,
கல்யாணத்திற்காக, அதன் பின் தேன்நிலவிற்காக என ஏகப்பட்ட லீவ் எடுத்ததின் விளைவு, இப்போது ஆபீஸ் வேலை அதிகமாகிவிட்டது.அதிலும் கடந்த இரண்ட வாரமாக ஆன்சைட் க்ளைய்ண்ட் கால் முடித்து உறங்க போவதிற்கு இரவு 12 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது. இன்றும் அதுபோல் இரவு லேட்டாக எங்கள் ரூமிற்க்குள் தூங்க சென்றேன்.
அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் மனைவியை டிஸ்டர்ப் பண்ணாமல் குட் நைட் கிஸ் கொடுக்க அருகில் குனிந்தபோது கவனித்தேன், அவள் கன்னங்களில் கண்ணீர், கன்னத்தை தொட்டுப் பார்த்தேன். அதிலே கண்ணீர் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது.
சற்றுநேரத்துக்கு முன்னர்தான் அவள் தூங்கியிருந்தாள் என்று நினைக்கிறேன். ஆனால் கண்ணீர் தூங்கவில்லை. "அவளுக்கு கண்ணீர் விடும் அளவிற்கு என்ன துயரம்?
சொந்தகாரங்க யாராவது ஏதும் திட்டியிருப்பார்களா??
அவளோட friends கூட ஏதும் பிரச்சனையா???
என்மேல் ஏதும் கோபமாக இருக்குமோ???"
கேள்விகளுடனும்,குழப்பத்துடனும் உறங்கி போனேன்.
வழக்கம்போல் காலையில் 'பெட் காபி'யுடன் என்னை எழுப்பினாள்.வழமைபோல் பளீச்சென்ற அவளது புன்னகை பூத்த முகம்,
இரவில் அழுதத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை .....
காபி அருந்தியபடியே அவளிடம் கேட்டேன் ஏன் இரவில் அழுதிருந்தாள் என்று....'அப்படி ஒன்றும் இல்லை,அழவே இல்லை' என்று சாதித்துவிட்டாள். (அழுத்தக்காரி...!)
என் காதல் மனைவிக்கு என்னிடம் கூட பகிர்ந்துக்கொள்ள முடியாத துயரம் அவளை வாட்டுகிறது என்பது என் நெஞ்சை பிசைந்தது.இருவருடைய குடும்பத்தினரின் முழு சம்மதத்துடன்
விமர்சையாக எங்கள் திருமணம் நடந்தது, நாங்க ஆசைப்பட்ட மணவாழ்க்கை அழகாக ஆரம்பித்திருக்கும் போது, அவளுக்கு கண்ணீர் விடும் அளவிற்கு என்ன மனக்கஷ்டம்????