உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த
கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து
கொண்டார் ஏன் ?கெவின் கார்ட்டர்- உலக புகழ்பெற்ற
புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும்
நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டு
மென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன.இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,
காடு, மலை என்று கொண்டு சென்றது.1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன்
சூடானுக்குக் கொண்டு சென்றது.அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.
குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள்
உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி,
தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின்
நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய
கெவின் தொலைதூர கிராமங்கள் வரை
சென்றார்.இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு
நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது;பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில்
உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத
நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல
ஊர்ந்து செல்வதைக் கண்டார்.அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின்
சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு
வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி
தவழ்ந்து கொண்டிருந்ததுஉண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.
தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.
ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை
நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.