அடர்ந்த காடு ஒன்று இருந்தது.
அதைச் சுற்றிலும் அழகான குட்டிக்
குட்டித் தீவுகள் இருந்தன.
அந்தக்
காட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார்.
அவர் காட்டுவாசிகளைத் தன்னுடைய
சொந்தப் பிள்ளைகளைப் போலக்
கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்
கொண்டார்.
அவருக்கு வயதாகிவிட்து. அவருக்குப்
பிறகு அந்த மக்களை வழி நடத்த வேறு
ஒருவரை நியமிக்க முடிவு செய்தார் .
அந்தக் காட்டில் , பரம்பரை ஆட்சி என்ற
வழக்கம் கிடையாது. கடினமான
போட்டிகளை நடத்தியே
தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
எனவே தலைவர் போட்டிகளை
அறிவிக்கும்படி தன்னுடைய
உதவியாளர்களுக்குக்
கட்டளையிட்டார்.
நான்கு நாட்கள் நடந்த போட்டிகளில்
இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்
பட்டனர். இருவருமே வீரத்திலும் ,
வலிமையிலும் சிறந்தவர்களாக
இருந்தனர். இருவரில் யாரைத்
தேர்ந்தெடுப்பது என்ற பெரிய குழப்பம்
வந்துவிட்டது . இருவரையும்
நேரடியாக மோதவிட்டால் , பதவி
ஆசையினால் ஒருவரை ஒருவர்
பலமாகத் தாக்கி அதில் ஒருவர்
கொல்லப்படுவது உறுதி.
தலைவருடைய மனம் அதற்கு
சம்மதிக்கவில்லை. எனவே வேறோரு
திட்டத்தை முடிவு செய்தார்.
மறுநாள் இரண்டு வீரர்களையும்
அவருடைய இடத்துக்கு
வரவழைத்தார் ." இளைஞர்களே! இதுவரை
உங்களுடைய பராக்கிரமத்தால்
உங்களுக்கு நிகர் யாருமில்லை
என்பதை நிரூபித்து விட்டீர்கள்.
இப்போது நடக்கப் போவது இறுதிப்
போட்டி . இதில் ஜெயிக்கும்
ஒருவன்தான்
தலைவனாக முடி சூட்டப்படுவான்.
இப்போது உங்கள் இருவருக்கும் சில
ஆயுதங்களும் , சமையல்
பாத்திரங்களும் , நம்முடைய உணவு
தானியமான சோளம் ஒரு மூட்டையும்
கொடுக்கப்படும். நம்முடைய ஆட்கள்
உங்கள் இருவரையும் நம்முடைய
காட்டுக்கு அருகிலிருக்கும்
வெவ்வேறு தீவுகளில் படகில்
கொண்டு போய் விட்டுவிட்டு வந்து
விடுவார்கள்.நீங்கள் உங்களிடம்
இருக்கும் தானியத்தை சமைத்து
சாப்பிட்டு அது தீரும்வரை
காட்டிலேயே தங்கி இருக்க வேண்டும்
. தீர்ந்த பிறகு காற்றில் இருக்கும்
மஞ்சள் மரத்தின் கிளைகளை ஒடித்துக்
கடற்கரையில் வைத்துக்
கொளுத்துங்கள் . அதிலிருந்து வரும்
புகையைக் கண்டவுடனேயே
இங்கிருந்து படகை அனுப்பி உங்களை
மீட்டுக் கொள்ளுவோம் . உங்களில்
யார், கையில் இருக்கும் தானியத்தை
அதிக நாட்கள் பயன்படுத்தி அந்தத்
தீவில் தாக்குப் பிடிக்கிறீர்களோ
அவன்தான் தலைவனாகத்
தேர்ந்தெடுக்கப்படுவான் " என்றார்.
மஞ்சள் மரம் என்பது அந்தக்
காடுகளில் அதிகமாகக் காணப்படும்
ஒரு மரம். அதை எரிக்கும் போது
எழும்பும் செம்பழுப்பு நிறப் புகை
நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.
தலைவர் சொன்ன நிபந்தனைகளை
இரண்டு வீரர்களும் ஏற்றுக்கொண்டு
ஆளுக்கொரு தீவுக்குப்
பயணமானார்கள் .