அய்யய்யோ. என்னடா கையிலே கட்டுப் போட்டுருக்க?இது தாண்டா அம்மா கட்டு.
என்னடா சொல்லற? உனக்கு கையில அடிபபட்டு உன்னோட அம்மா கடடிவிட்ட கட்டா?
இல்லடா. இது ஒரு ரவடிப் பொம்பளயோட வேலடா.
ஒண்ணும் புரில. வெவரமாச் சொல்லுடா.
நேத்து சாய்ந்தரம் ரோட்ல (பாதையிலே) வேகமா நடந்து போயிட்டிருந்தண்டா. எங் கையு தெரியாம எனக்கு முன்னால போயிட்டிருந்த ஒரு நடுத்தர வயசுப் பொம்பள மேல மோதிரிச்சு. அவ என்ன மொறச்சுப் பாத்தா. நா என்ன மன்னிச்சுங்க அம்மான்னு சொன்னென். உடனே "ஏண்டா பரதேசி, இந்த ரவுடி முத்துகருப்பியயா நீ 'அம்மா" ன்னு சொன்ன? ஏண்டா எனக்கு நாப்பது வயசு ஆகுது. என்னக் கல்யாணம் பண்ணிக்க எத்தனையோ பெரிய ரவுடிங்கெல்லாம் ஆசப்பட்டாங்க. நா கடசி வரைக்கும் கன்னிப் பொண்ணா இருக்கவே ஆசப்படறேன். அப்பத் தான் ரேசன் கார்டு வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை எல்லாத்லேயும் எம் பேரு எப்பவுமே செல்வி முத்துகருப்பி -ன்னே இருக்கும். என்ன அக்கா இல்லனா மேடம்னு கூப்படமா அம்மா- ன்னு கூப்பிட்டதுக்கு இதோ வாங்கிக்க"ன்னு சொல்லிட்டு எங் கையப் பிடிச்சு பலமா முறுக்கிட்டாடா. எங் கை அவ முறுக்கினதலே தொங்கிப் போச்சுடா. அப்பறம்
அவளே பக்கத்திலே இருந்த மருத்துவ மனைக்குக் கூட்டிட்டு போயி கட்டுப் போட வச்சு மருந்து மாத்திரை வாங்கித் தந்து கையில நூறு ரூபா குடுத்து. எங் கட்டுப் போட்ட கையப் பிடிச்சு "இது தாண்டா அம்மா கட்டு. இனிமே என்ன அம்மா-ன்னு கூப்பிட்டு அசிங்கப்படுத்தாத. நான் வாழ் நாள் எல்லாம் செல்விடா. செல்வி முத்துகருப்பி-டா. நீ சின்னப்பையன். அழகான பையன்-ன்னு சொல்லி எங் கன்னத்த லேசா வருடிக் கொடுத்துட்டுப் போய்ட்டாடா. இது செல்வி முத்துகருப்பியோட "அம்மா கட்டுடா".நீ ரொம்பக் குடுத்து வச்சவன்-டா. ரவடி பொம்பளகிட்ட அடி வாங்கிட்டு அழகன்-ங்கற பேரையும் சம்பாதிச்சிட்டு வந்திட்டடா.
Hah hah haaaaahaaa