படிப்பினை

135 12 5
                                    

1×9=7
2×9=18
3×9=27
4×9=36
5×9=45
6×9=54
7×9=63
8×9=72
9×9=81
10×9=90

மேலே உள்ள சமன்பாடு ஆசிரியை ஒருவரால் கரும்பலகையில் எழுதப்பட்டது. இந்த சமன்பாடு எழுத ஆரம்பிதது முதல் வகுப்பறை முழுவதும் சிரிப்பொலி தொடர்ந்து கொண்டிருந்தது. முதலாவது சமன்பாடு பிழையாக எழுதப்பட்டிருநத்து மாணவர்களைச் சிரிக்கத் தூண்டியது. சமன்பாட்டை எழுதி முடித்து மாணவர்களை நோக்கிய ஆசிரியை சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு பேசத் துவங்கினார்..

நான் முதல் சமன்பாட்டை பிழையாக எழுதியிருக்கின்றேன. இவ்வாறு எழுதியமைக்கு ஒரு காரணமுண்டு. இதன் ஊடாக உங்களுக்கொரு படிப்பினையைக் கற்றுத் தருவதே அதன் நோக்கம். இந்த உலகம் உங்களை எவ்வாறு மதிப்பிடுகின்றது என்பதை நீங்கள் இதன் ஊடாகப் புரிந்து கொள்வீர்கள். நான் இங்கு 9 முறைகள் மிகச் சரியான விடயங்களை எழுதியிருக்கின்றேன். அதற்காக நீங்கள் யாரும் என்னைப் பாராட்ட முன்வரவில்லை. ஆனால் நான் பிழையாக எழுதிய ஒரே ஒரு விடயத்தைக் காரணங்காட்டி அனைவரும் சிரித்து கேலி செய்து விட்டீர்கள்.

படிப்பினை

நீங்கள் இலட்சம் தடவைகள் விடயங்களச் சரியாக செய்த போதிலும் இந்த உலகம் உங்களை ஒரு போதும் பாராட்டப் போவதில்லை.ஆனால் நீங்கள் செய்த ஒரு பிழையைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு ஒருமித்து நின்று மிகக் கீழ்த்தரமாக விமர்சிக்கும்.. இவைகளைக்கண்டு ஒரு போதும் தளர்ந்து விடாதீர்கள். உங்களைப் பார்த்து சிரித்தவர்கள்,  உங்களை விமர்சித்தவர்கள் முன்னால் உயர்ந்து நிற்கும் முயற்சியில் உறுதியாக நில்லுங்கள்.

- ஒரு ஆங்கிலப் பதிவின் மொழிபெயர்ப்பு-

வாசித்ததில் நேசித்தவை..Waar verhalen tot leven komen. Ontdek het nu